ஐ.பி.எல். கிரிக்கெட்: பெங்களூர் அணி இன்று ஐதராபாத் அணியை எதிர்கொள்கிறது

கட்டாயம் வெற்றி பெற வேண்டும் என்ற நெருக்கடியுடன் பெங்களூர் அணி இன்று ஐதராபாத் அணியை எதிர்கொள்கிறது.

அடுத்த சுற்று வாய்ப்பில் நீடிக்க கட்டாயம் வெற்றி பெற வேண்டும் என்ற நெருக்கடியுடன் பெங்களூ ர் அணி இன்று ஐதராபாத் அணியை எதிர்கொள்கிறது.

16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டித்தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ‘ஏ’ பிரிவில் மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகளும், ‘பி’ பிரிவில் சென்னை சூப்பர் கிங்ஸ், ஐதராபாத் சன் ரைசர்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், பஞ்சாப் கிங்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகளும் இடம் பெற்றுள்ளன.

ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள அணிகளுடன் தலா ஒரு முறையும், அடுத்த பிரிவில் உள்ள அணிகளுடன் தலா 2 முறையும் போட்டியிட வேண்டும். இதன்படி ஒவ்வொரு அணியும் மொத்தம் 14 லீக் ஆட்டங்களில் விளையாடும். லீக் சுற்று முடிவில் புள்ளி பட்டியலில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு முன்னேறும்.

விறுவிறுப்பான கட்டத்தை எட்டியிருக்கும் ஐ.பி.எல். போட்டியில்  நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் முதல் அணியாக ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு தகுதி பெற்று இருப்பதுடன் புள்ளி பட்டியலில் முதலிடத்தை உறுதி செய்துள்ளது. கெப்பிட்டல்ஸ், ஐதராபாத் சன் ரைசர்ஸ் ஆகிய அணிகள் அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து விட்டன. எஞ்சிய 3 இடத்துக்கு கடும் போட்டி நிலவுகிறது.

இந்த நிலையில் ஐதராபாத் ராஜீவ் காந்தி சர்வதேச விளையாட்டு மைதானத்தில் இன்று (வியாழக்கிழமை) நடைபெறும் 65-வது லீக் போட்டியில் முன்னாள் சாம்பியனான ஐதராபாத் சன் ரைசர்ஸ், பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியை எதிர்கொள்வது குறிப்பிடத்தக்கது.

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன