ஐபிஎல் :இன்றைய போட்டியில் மும்பை-பெங்களூர் அணிகள்

ஐபிஎல் போட்டித்தொடரில் 55 ஆவது போட்டியில் 54வது லீக் போட்டியில் மும்பை-பெங்களூர் அணிகள் இன்று (09) மோதுகின்றன.

மும்பை அணி 10 போட்டியில் 5 வெற்றி, 5 தோல்வி என்று 10 புள்ளிகளுடன் 8வது இடத்திலும், பெங்களூர் 10 போட்டியில் 5 வெற்றி, 5 தோல்வியுடன் 6வது இடத்திலும் உள்ளது.

பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற வேண்டும் என்றால் இரு அணிகளும் எஞ்சிய 4 லீக்கிலும் வெற்றி பெறவேண்டும். முந்தைய போட்டியில் சென்னையுடன் தோல்வியை தழுவிய மும்பை சொந்த ஊரில் வெற்றிப்பாதைக்கு திரும்ப வேண்டிய நெருக்கடியுடன் விளையாடவுள்ளது.

இதில் இரு ஹடக்-அவுட்’டும் அடங்கும். பேட்டிங்குக்கு சாதகமான வான்கடே மைதானத்தில் உள்ளூர் ரசிகர்களின் முன்னிலையில் அவர் மீண்டும் பார்முக்கு திரும்புவது அவசியம்.

பெங்களூர் அணியை பொறுத்தவரை விராட் கோஹ்லி (419 ரன்), டூ பிளஸ்சிஸ் (511 ரன்) தொடர்ந்து சீரான துடுப்பாட்டத்தை  வெளிப்படுத்தினாலும், மிடில் வரிசை ஒருசேர கைகொடுக்காததால் ஆர்சிபி திணறுகிறது. குறிப்பாக அதிரடி மன்னன் மேக்ஸ்வெல் சில ஆட்டங்களில் மட்டுமே சிறப்பாக ஆடி உள்ளார்.

பந்து வீச்சில் எதிர்பார்க்கப்பட்ட சுழற்பந்து வீச்சாளர் ஹசரங்கா (7 ஆட்டத்தில் 7 விக்கெட்) இன்னும் முழுமையான திறமையை வெளிப்படுத்தவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன