தேசத்தின் கலை இலக்கியத்துறையை வளப்படுத்தும் நோக்குடன் பிரதமர் அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்படும் “சங்கதன மண்டபய “ நிகழ்ச்சித் தொடரில் இடம்பெற்ற இலக்கிய முன்னோடி சாகர பலன்சூரியவின் (கேயஸ்) பாத்திரம் என்ற தலைப்பில் அலரி மாளிகையில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.
இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த பிரதமர்-
ஒரு கவிஞராக கேயெஸ் என்ற பெயரில் பதியப்பட்டிருப்பது அவரது ஆழ்ந்த எண்ணங்கள் மற்றும் இலக்கிய வடிவங்களின் ஊடாக வளரும் இளம் தலைமுறைக்கு வழங்கப்பட்ட விசேட பரிசுகளாகும் என்பதை நாம் அனைவரும் அறிவோம். அவை எமது வரலாற்றில் இலக்கியத்தினதும் தேசத்தினதும் ஆன்மாவை மீண்டும் தட்டி எழுப்புவதற்கான முடிவுறாத பயணமாகும். மொழியை மேலும் வளப்படுத்தும் இலக்கிய துறைக்கான இந்த பங்களிப்புகளில் சாகர பலன்சூரியவின் கவிதைகளுக்கு முக்கிய இடம் உள்ளது.
சாகர பலன்சூரிய கிராமியத்தை என்றென்றும் நினைவு கூர்கின்ற ஒருவர். சிறுவயது நினைவுகளை மீண்டும் மீண்டும் நினைவு கூர்ந்து, பெருமிதம் கொள்ளும் தன்மையை அவரது கவிதைகளில் காணலாம். எமது மாணவர்கள் அந்தக் கவிதைகளை ஆயிரக்கணக்கான வகுப்பறைகளில் இலட்சக்கணக்கான முறை படித்திருக்க வேண்டும். அது ஏன்? அவை தலைமுறை தலைமுறையாக கடத்தப்படக்கூடிய எமது மொழியையும் இலக்கியத்தையும் கவிதையையும் செழுமைப்படுத்திய இலக்கியப் படைப்புகளாகும். இக்கவிதைகள் இலக்கிய இரசனையை மட்டுமன்றி எமது வாழ்வையும் இலக்கியத்தின் ஊடாக முன்வைக்கின்றன.
சாகர பலன்சூரியவை பிற்காலத்தில் நாங்கள் பாராளுமன்ற உறுப்பினராக பார்த்தோம். குறிப்பாக “தசபனத“வுக்கான (பத்து கட்டளைகள்) மக்கள் போராட்டத்தின் போதாகும். துணிச்சலுடன் நாட்டிற்காக முன்னோக்கிச் சென்ற மகா சங்கத்தினரின் தலைமைத்துவத்தின் கீழ் சாகர பலன்சூரிய முன்னின்று செயற்பட்டார். அக்காலத்தில் கவிஞர்களும் இலக்கியவாதிகளும் கூடி தேசத்தை புத்தெழுச்சி பெறச் செய்ததை மென்மேலும் ஆய்வு செய்ய வேண்டும்.
ஒரு தீர்க்கமான பாராளுமன்ற விவாதத்தின் முடிவில், வாக்களிப்பின் போது ஹொரணை பாராளுமன்ற உறுப்பினர் சாகர பலன்சூரியவிடம் பிரதமர் பேசினார். கலந்துரையாடலின் போது, “நாளை, உங்களை இலங்கையின் கல்வி அமைச்சராக ஆக்குகின்றேன், இன்னும் அரை மணி நேரத்தில் இடம் பெறும் வாக்களிப்பில் எனக்கு வாக்களியுங்கள்” என்று பிரதமர் கூறினார், அதற்கு சாகர பலன்சூரிய எடுத்த எடுப்பிலேயே சொன்னார் ”நீங்களும் நானும் நீண்ட காலமாக ஆசிரியர்களாக எமது பரம்பரைக்கு முன்மாதிரியை வழங்க பாடுபட்டவர்கள். எனக்கு அமைச்சர் பதவியை பார்க்கிலும் எனது தீர்மானத்தில் தொடர்ந்தும் உறுதியாக இருப்பது முக்கியம். எனவே தயவுசெய்து என்னால் கொள்கைகளை மாற்ற முடியாது“ என்று கூறினார். அவர் இருக்கையில் வந்து அமர்ந்து பிரதமரின் முன்மொழிவை நிராகரித்தார். இன்று வாழும் தலைமுறையினருக்கு இது ஒரு சிறந்த முன்மாதிரியாக அமையும்.
இப்போது சாகர பலன்சூரிய வழங்கிய முன்மாதிரி சமூகமயமாக்கப்படுவது குறைந்துள்ளது என்று நான் காண்கிறேன். புதிய தலைமுறைக்கு, குறிப்பாக இளம் தலைமுறைக்கு, மாணவர் தலைமுறைக்கு, இது போன்ற இலக்கிய வழிகளில் பிரவேசிக்குமாறு அழைப்பு விடுக்கிறேன் என்றும் பிரதமர் கூறினார்.
பேராசிரியர் சங்கைக்குரிய பத்தேகம ஞானிஸ்ஸர தேரர் மற்றும் பேராசிரியர் கமல் வலேபொட ஆகியோர் இங்கு விரிவுரைகளை நிகழ்த்தியதுடன், பேராசிரியர் சங்கைக்குரிய மதுருஓயே தம்மிஸ்ஸர தேரர் உள்ளிட்ட மகா சங்கத்தினர், பாராளுமன்ற உறுப்பினர் யதாமினி குணவர்தன, லக்விஜய சாகர பலன்சூரிய, ஹெலஹவுலே தலைவர் ஸ்ரீநாத் கணேவத்த, குணதாச அமரசேகர, திலகரத்ன குருவிட பண்டார, லீல் குணசேக்கர மற்றும் பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
பிரதமர் ஊடகப் பிரிவு