எட்டியாந்தோட்டை தேர்தல் தொகுதியில் அபிவிருத்தித் திட்டங்கள்

எட்டியாந்தோட்டை தேர்தல் தொகுதியில் அபிவிருத்தித் திட்டங்கள்

எட்டியாந்தோட்டை தேர்தல் தொகுதியில் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக சப்ரகமுவ மாகாண ஆளுநர் நவீன் திசாநாயக்க தெரிவித்தார்.

எட்டியாந்தோட்டை தேர்தல் தொகுதி மக்கள் எதிர்நோக்கும் பிரச்சிணைகள் குறித்து சப்ரகமுவ மாகாண ஆளுநர் நவின் திசாநாயக்க கடந்த வெள்ளிக்கிழம(25)மேற்படி தேர்தல் தொகுதிக்கு விஜயம் செய்து மக்கள் எதிர்நோக்கம் பிரச்சிணைகளை கேட்டறிந்து அவர்கள் மத்தியில் உரையாற்றும்போதே ஆளுநர் இவ்வாறு தெரிவித்தார்.

சப்ரகமுவ மாகாண ஆளுநர் அங்கு மக்கள் மத்தில் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்இ

தற்போது பழுதடைந்து காணப்படும் 101 வருடம் பழைமைவாய்ந்த எட்டியாந்தோட்டை கராகொட பாலத்தை முழுமையாக புணரமைக்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் இருந்து 500 மில்லியன் ரூபா நிதி பெறப்பட்டுள்ளன.

கராகொட பாலத்தின் அபிவிருத்திப் பணிகள் அடுத்த மாதம்(செப்டம்பர்) ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் கித்துல்கல கிராமத்தின் வீதியும் அபிவிருத்தி செய்வதற்கு 15 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் அபிவிருத்திப் பணிகளும் விரைவில் ஆரப்பிக்கப்படும் என்று சப்ரகமுவ மாகாண ஆளுநர் நவின் திசாநாயக்க மேலும் தெரிவித்தார்.

மேலும் எட்டியாந்தோட்டை பிரதச சபை, எட்டியாந்தோட்டை அல்கொல்ல பிரதேச வைத்தியசாலை, எட்டியாந்தோட்டை அமனாவல பிரதேச வைத்தியசாலை, கித்துகல தெலிகம வைத்தியசாலைஇ எட்டியாந்தோட்டை இங்கிரியாவத்தை மகா வித்தியாலயம் என்பவற்றுக்கு சப்ரகமுவ மாகாண ஆளுநர் விஜயம் செய்து அங்கு மக்கள் எதிர்நோக்கும் பிரச்சிணைகள்; மற்றும் பாடசாலைகளின் குறைபாடுகளையும் கேட்டறிந்ததார்.

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன