ஊவா, கிழக்கு மாகாணங்களில் 75 மி.மீக்கும் அதிகமான பலத்த மழை

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு. தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது.

2023 ஒக்டோபர் 15ஆம் திகதிக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு

2023 ஒக்டோபர் 15ஆம் திகதி அதிகாலை 5.30 மணிக்கு வெளியிடப்பட்டது.

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடியசாத்தியம்காணப்படுகின்றது.

ஊவா, மற்றும் கிழக்குமாகாணங்களில் சில இடங்களில் 75 மி.மீக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை வீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

மேல் மற்றும் தென்மாகாணங்களிலும்  புத்தளம் மற்றும் மன்னார் மாவட்டங்களில் கரையோரப் பகுதிகளில் காலை வேளையில் மழை பெய்யக்கூடும்.

மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலைகாணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும்வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையானமுன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக்கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன