13 ஆவது உலகக் கிண்ணக் கிரிக்கட் சுற்றுத்தொடரில் நான்காவது போட்டி இன்று (07) இந்தியாவின் டெல்லியிலுள்ள அருண் ஜெட்லி விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இத்தொடரில் இலங்கை அணி பங்கறேற்கும் முதலாவது போட்டி இன்று நடைபெறுகிறது.போட்டியில் தென்னாபிரிக்க அணியை இலங்கை எதிர்கொள்ளுகின்றது. இலங்கை நேரப்படி இன்று பிற்பகல் 2.15ற்கு போட்டி ஆரம்பமாகும்.
இரு அணிகளும் இத்தொடரின் பயிற்சி போட்டிகளில் வெளிப்படுத்திய ஆர்வத்திலும் பார்க்க சிறப்பாக விளையாடும் என்பதால் போட்டி மிகவும் விறுவிறுப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அருண் ஜெட்லி மைதான ஆடுகளம் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக உள்ளது என்பதை வரலாறு நிரூபித்துள்ளது. இதனால் இரண்டாவதாக துடுப்பாட்டம் அதிக சாதகமாக இருக்கலாம் என்று கிரிக்கெட் வர்ணனையாளர்கள கருத்து தெரிவித்துள்ளனர். இதனால் நாணய சுழற்சியில் வென்று முதலில் பந்துவீச தீர்மானிப்பது குறித்த விடயத்தில் இலங்கை அணியின் தீர்மானம் புத்திசாலித்தனமான இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை , 2009 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் நடைபெற்ற இந்திய மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான ஒருநாள் போட்டியின் போது இந்த ஆடுகளம் ஆபத்தான ஆடுகளம் என்று அழைக்கப்பட்ட வரலாறும் உண்டு. பந்து வீச்சின் போது வீரர்களின் தலை மற்றும் வயிற்றில் அவை பட்டன. இதனால் இந்த போட்டியை இடைநிறுத்தவும் மைதானத்திற்கு தடை விதிக்கவும் ஐ.சி.சி நடவடிக்கை எடுத்தமை குறிப்பிடத்தக்கது.