உர விநியோகம் இன்று ஆரம்பம்

பெரும் போகத்திற்குத் தேவையான உர விநியோகம் நடவடிக்கை இன்று (09) முதல் நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என்று விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த நடவடிக்கையின் கீழ் 21 ஆயிரம் மெட்ரிக் தொன் யூரியா விநியோகிக்கப்பவுள்ளது. விவசாய மத்திய நிலையங்கள் மூலம் இவற்றைக் கொள்வனவு செய்ய முடியும். 50 கிலோ எடை கொண்ட யூரியா உரம் 9 ஆயிரம் ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட உள்ளது. விவசாயிகளின் விருப்பத்திற்கு அமைய இரசாயன மற்றும் சேதனப் பசளைகளை கொள்வனவு செய்வதற்கு சந்தர்ப்பம் உண்டு. இதற்காக விவசாயிகளுக்கு ஒரு ஹெக்டயர் உற்பத்தி நிலத்திற்கு 15 ஆயிரம் ரூபா வீதம் கொடுப்பனவு வழங்கப்பட உள்ளது. நெல் உற்பத்திக்கு மேலதிகமாக மரக்கறி மற்றும் ஏனைய பயிர்களுக்காக யூரியா மற்றும் ஏனைய உர வகைகளை வழங்கவும் முக்கியத்துவம் வழங்கப்படும் என்று விவசாயத் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இதற்கு மேலதிகமாக சேற்று உரத்தை நாட்டில் தயாரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதால் அதன் இறக்குமதியை நிறுத்துவதற்கு விவசாய அமைச்சு தீர்மானித்துள்ளது.

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன