உர இறக்குமதிக்கான கேள்வி மனுவை 3 மாதங்களாக தாமதப்படுத்திய இரண்டு அதிகாரிகளை வெளியேற்ற தீர்மானம்

உர இறக்குமதிக்கான கேள்வி மனுவை மூன்று மாதங்களாக தாமதப்படுத்திய இரண்டு அதிகாரிகளையும் விவசாய அமைச்சிலிருந்து உடனடியாக வெளியேற்றுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பெரும் போகத்தில் விவசாயிகளுக்கு தேவையான யூரியா உரத்தை கொள்வனவு செய்வதற்கு விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர அமைச்சரவையின் அங்கீகாரத்தை பெற்றார் , விவசாய அமைச்சின் உரம் இறக்குமதி தொடர்பான அதிகாரிகளுக்கு உரிய கேள்வி மனுவுக்கான கோர நடவடிக்கைகளை மேற்கொள்ள பணிப்புரையை விடுத்ததாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது.
ஆனால் அமைச்சரவை ஒப்புதல் அளித்து மூன்று மாதங்கள் கடந்தும், அதை கையாளும் இரண்டு பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளும் யூரியா டெண்டர் கோருவதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது தெரியவந்துள்ளது.
இதேவேளை பல நாடுகளுக்கிடையே ஏற்பட்டுள்ள யுத்த மோதல்கள் காரணமாக உலக சந்தையில் யூரியா உரம் உட்பட அனைத்து உரங்களின் விலையும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளார்.
மே மாதத்தில் இந்த உரத்தை கொள்வனவு செய்ய ஏற்பாடு செய்திருந்தால் யூரியா உரத்தை மிகக் குறைந்த விலையில் கொள்வனவு செய்ய முடியும் என தெரியவந்துள்ளது.

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன