ஈரானில் சமூக சீர்திருத்தங்களுக்காக போராடிவரும் பலமுறை சிறையில் அடைக்கப்பட்ட நர்கஸ் முகமதி Narges Mohammadi, 2023 ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் விருதுக்கு தெரிவாகியுள்ளார்
இவர் பெண்கள் உரிமைகளுக்காகவும் ஈரானில் உள்ள கொடூரமான மரண தண்டனைகளை எதிர்த்தும் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்துள்ளார்.
இந்நிலையில் 2023 ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு ஈரானில் பெண்கள் அடக்குமுறைக்கு எதிராக போராடி சிறையில் உள்ள நர்கேஸ் முகமதிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
ஈரானில் 9 வயது சிறுமி முதல் வயதான பெண்கள் வரை ஹிஜாப் அணிவது கட்டாயம். பெண்கள் ஆடை அணியும் விதத்தை கண்காணிக்க ‘காஸ்த் எர்ஷாத்’ என்ற சிறப்புப் பிரிவு பொலிசார் பொது இடங்களில் கண்கானித்துவருகின்றனர். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 13-ம் திகதி ஈரானின் குர்திஸ்தான் மாகாணத்தில், மாஷா அமினி என்ற 22 வயது பெண், முறையாக ஹிஜாப் அணியவில்லை என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டார்.
அவர் பெலிஸ் காவலில் இருந்த போது சில நாட்கள் கழித்து உயிரிழந்தார். அதனைக் கண்டித்து ஈரானில் மிகப்பெரிய போராட்டம் நடைபெற்றது சிறையில் இருந்தபடியே அந்த போராட்டங்களுக்கு நர்கேஸ் முகமதி. ஆதரவு திரட்டினார்.அவருக்கு தற்போது அமைதிக்கான நோபல் பரிசு அளிக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே 13 முறை கைது செய்யப்பட்ட அவருக்கு 31 ஆண்டுகள் சிறைவாசம் மற்றும் 154 கசையடிகள் தண்டனையாக அளிக்கப்பட்டுள்ளது. நர்கேஸ் முகமதி, அவருக்கு தொலைபேசி அழைப்புகளை ஏற்கவும் மற்றும் பார்வையாளர்களை சந்திக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மாஷா அமினி உயிரிழந்த முதல் நினைவு தினத்தில் நியூ யார்க் டைம்ஸ் பத்திரிகைக்கு, முகமதி எழுதிய கட்டுரை பலரது கவனத்தையும் ஈர்த்தது. அமைதிக்கான நோபல் பரிசு குறித்து சிறையில் இருந்த படி அறிக்கை வெளியிட்டுள்ள முகமதி, இந்த அங்கீகாரம், தன்னை மேலும் உறுதியுடனும், நம்பிக்கையுடனும் செயல்பட வழிவகுக்கும் என தெரிவித்துள்ளார்.