படுகொலைகளை நிறுத்துமாறு இஸ்ரேல் மற்றும் பலஸ்தீனத்திடம் கோரிக்கை விடுப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் திரு.சஜித் பிரேமதாச இன்று (17) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
இஸ்ரேல் மற்றும் பலஸ்தீனத்தினருக்கிடையிலான மோதலில் ஏராளமான தாய்மார்களும் ,பெண்களும், சிறுவர்களும் கொல்லப்படுகின்றனர். மனித படுகொலைகளும் இடம்பெறுகின்றன. உடனடியாக இனப்படுகொலைகள் நிறுத்தப்பட வேண்டும் என இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன குழுக்களிடம் தயவுடன் நாம் கோருகிறோம்.
நமது நாடாளுமன்றம் என்ற வகையில் அமைதியாக இருப்பது நல்லதல்ல. அந்த நாடுகளில் உள்ள நமது மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள் என்று எதிர்க்கட்சித் தலைவர் திரு.சஜித் பிரேமதாச பாராளுமன்றத்தில் மேலும் தெரிவித்தார்.