இஸ்ரேலில் பராமரிப்பு தொழிலுக்காக அனுப்பப்பட்டவர்களின் எண்ணிக்கை

இஸ்ரேலில் பராமரிப்பு தொழிலுக்கான பணிப்பாணையை பெற்று மேலும் 15 இலங்கையர்களுக்கு விமான பயண சீட்டுக்களை வழங்கும் நிகழ்வு (31) தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் திரு மனுஷ நாணயக்கார தலைமையில் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சில் இடம் பெற்றது.

இந்த வருடத்தின் முதல் 06 மாதங்களில் மாத்திரம் 202 இலங்கையர்களுக்கு இஸ்ரேலில் பராமரிப்பு சேவைத் துறைக்கான பணிப்பாணையை கிடைத்தமை குறிப்பிடத்தக்கது.
இஸ்ரேல் அரசாங்கத்திற்கும் இலங்கை அரசாங்கத்திற்கு இடையில் எட்டப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு அமைவாக ,இஸ்ரேலில் பராமரிப்பு தொழில் வாய்ப்பு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் ஊடாக மாத்திரமே இலங்கையர்களுக்கு கிடைக்கும் என்றும், இஸ்ரேலில் தொழில் வாய்ப்பை பெற்றுக்கொள்வதற்காக எந்தவொரு வெளியாருக்கும் பணம் அல்லது கடவுச்சீட்டை வழங்குவதைத் தவிர்த்துக்கொள்ளுமாறு தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது.

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன