இலங்கை மத்திய வங்கி அதன் தொடக்க நாணயக்கொள்கை அறிக்கையினை  வெளியிடுகின்றது

நாணயக்கொள்கை அறிக்கையின் வெளியீடானது நாணயக்கொள்கையின் வெளிப்படைத்தன்மையினை மேம்படுத்துவதற்கான முக்கியமானதொரு படிமுறையினைக் குறிப்பதுடன் நாணயக்கொள்கைத்
தீர்மானங்களை உருவாக்குவதில் இலங்கை மத்திய வங்கியின் நாணய சபையினால் பரிசீலனையிற்கொள்ளப்பட்ட தகவல்களை வெளிப்படுத்துவதனூடாக அனைத்து ஆர்வலர்களுடனான ஈடுபாட்டினை ஊக்குவிக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது.

நாணயக்கொள்கை அறிக்கையானது உள்நாட்டு மற்றும் உலகளாவிய துறைகள் மீதான தற்போதைய பேரண்டப்பொருளாதார அபிவிருத்திகள் மற்றும் அவற்றின் தோற்றப்பாடு என்பவற்றின் பகுப்பாய்வின்
அடிப்படையிலமைந்த பணவீக்கம் மற்றும் ஏனைய முக்கிய பேரண்டப்பொருளாதார மாறிகளின் எதிர்கால போக்கு தொடர்பிலான மத்திய வங்கியின் மதிப்பீட்டினை வழங்குகின்றது. தற்போதைய மற்றும்
எதிர்பார்க்கப்படுகின்ற அபிவிருத்திகள் என்பவற்றினைக் கருத்திற்கொண்டு பணவீக்கம் மற்றும் பொருளாதார வளர்ச்சி என்பன மீதான எறிவுகளிற்கான இடர்நேர்வுகளின் சமநிலை தொடர்பிலான மதிப்பீடொன்றினை வழங்குவதனையும் நாணயக்கொள்கை அறிக்கை நோக்காகக் கொண்டுள்ளது. அத்தகைய மதிப்பீடானது நாணயக்கொள்கைத் தீர்மானங்களை மேற்கொள்கையில் நாணயச் சபையின் சிந்தனை குறித்து சகல ஆர்வலர்களுக்கும் அதிக தெளிவினையளிப்பதில் இது துணைபுரியும்.

முழுவடிவம்

https://www.cbsl.gov.lk/sites/default/files/cbslweb_documents/press/pr/press_20230731_cbsl_publishes_its_inaugural_monetary_policy_report_t.pdf

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன