கொள்வனவு முகாமையாளர் சுட்டெண்கள் 2023 செத்தெம்பரில் தயாரித்தல் நடவடிக்கைகளில் சுருக்கத்தையும் பணிகள் நடவடிக்கைகளில் விரிவடைதலையும் எடுத்துக்காட்டின.
தயாரிப்புக் கொள்வனவு முகாமையாளர் சுட்டெண், 2023 செத்தெம்பரில் 45.7 சுட்டெண் பெறுமதியினைப் பதிவுசெய்து, தயாரித்தல் நடவடிக்கைகளில் சுருக்கத்தினை எடுத்துக்காட்டியது. இப்பின்னடைவிற்கு அனைத்து துணைச் சுட்டெண்களிலும் அவதானிக்கப்பட்ட குறைவடைந்த செயலாற்றம் துணையளித்தது.
பணிகள் துறை கொ.மு.சுட்டெண், 2023 செத்தெம்பரில் 54.7 சுட்டெண் பெறுமதியினைப் பதிவுசெய்து, முன்னைய மாதத்துடன் ஒப்பிடுகையில் மெதுவான வேகத்தில் பணிகள் நடவடிக்கைகளில் விரிவடைதலை எடுத்துக்காட்டியது. புதிய வியாபாரங்கள், தொழில் நடவடிக்கைகள், தொழில்நிலை மற்றும் நடவடிக்கைக்கான எதிர்பார்க்கைகள் என்பவற்றில் அவதானிக்கப்பட்ட அதிகரிப்புக்கள் இதற்கு முன்னிலை வகித்திருந்தன. எவ்வாறிருப்பினும், நிலுவையிலுள்ள பணிகள் மாதகாலப்பகுதியில் சுருக்கமடைந்து காணப்பட்டன.
முழுவடிவம்