இலங்கை கொள்வனவு முகாமையாளர்களின் சுட்டெண் – ஓகத்து 2023

கட்டடவாக்கத் தொழிற்துறை 2023 ஓகத்தில் குறைவடைந்த மட்டத்தில் தொடர்ந்தும் செயலாற்றியது, இருந்தும் 47.0 கொண்ட மொத்த நடவடிக்கைச் சுட்டெண் பெறுமதியினைப் பதிவுசெய்து நடுநிலையான அடிப்படை அளவுமட்டத்தை நோக்கிச் சென்றது. பதிலிறுப்பாளர்கள் குறிப்பிடுவதற்கமைய, உயர்வான போட்டிமிக்க விலைக்கோரல் விலைக்குறிப்பீடு சமர்ப்பித்தல் செயன்முறையில் மட்டுப்படுத்தப்பட்டளவில் கிடைக்கப்பெறுகின்ற கருத்திட்டங்களைப் பெற்றுக்கொள்வதற்கு நிறுவனங்கள் சந்தை விலையை விடவும் விலைக்குறைப்பதற்கு முனைந்தன.

புதிய கட்டளைகளில் தொடர்ச்சியான வீழ்ச்சியினால் பிரதிபலிக்கப்பட்டவாறு புதிய கருத்திட்டங்கள் கிடைக்கப்பெறாமை தொழிற்துறை மீது தொடர்ந்தும் கடுமையான பாதகமான தாக்கத்தினைக் கொண்டிருந்தது. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிதியளிக்கப்பட்ட கட்டுமானக் கருத்திட்டங்கள் மட்டுப்படுத்தப்பட்டளவில் கிடைக்கப்பெறுதல் தொழிற்துறையில் முக்கிய கரிசனையாக இன்னும் காணப்படுவதாக பல பதிலிறுப்பாளர்கள் எடுத்துக்காட்டினர். இப்பின்னணியில் தொழில்நிலையில் தொடர்ச்சியான வீழ்ச்சியினால் பிரதிபலிக்கப்பட்டவாறு தொழிற்பாடுகளைக் குறைப்பதற்கு ஒப்பந்த அடிப்படையிலான ஊழியர்களை நிறுவனங்கள் பதவிவிலக்கின. மேலும், மாதகாலப்பகுதியில் மெதுவான வீதத்திலேனும் கொள்வனவுகளின் அளவு தொடர்ந்தும் வீழ்ச்சியடைந்தது. அதேவேளையில், நிரம்பலர் இயலளவு மீது குறைவடைந்த அழுத்தத்தின் பிரதான காரணமாக மாதகாலப்பகுதியில் நிரம்பலர்களின் விநியோக நேரம் குறுக்கமடைந்தது

பொருளாதாரத்தில் எதிர்பார்க்கப்படும் மீட்சியின் பிரதான காரணமாக செத்தெம்பர் தொடக்கம் கருத்திட்டங்கள் கிடைக்கப்பெறுவதில் மேம்பாடொன்றினை அவை அவதானிக்கின்றமையினால் அடுத்துவரும் மூன்று மாதங்களை நோக்கிய நிறுவனங்களுக்கிடையிலான எண்ணப்பாங்கு சாதகமாக காணப்பட்டது.

முழுவடிவம்

https://www.cbsl.gov.lk/sites/default/files/cbslweb_documents/press/pr/press_20230927_sl_pmi_construction_2023_august_t.pdf

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன