இந்தியாவில் தற்போது நடைபெற்றுவரும் 2023 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடரில் இலங்கை கிரிக்கெட் அணியின் செயல்திறன் குறித்து இலங்கை கிரிக்கெட் (SLC) கவலையை தெரிவித்துள்ளது.
இலங்கை கிரிக்கெட் அணியின் செயற்பாடு ஏமாற்றத்தை அளித்திருப்பதாக இலங்கை கிரிக்கெட் குறிப்பிட்டுள்ளது.குறிப்பாக நேற்று (02) இந்திய அணியுடனான தோல்வி பெரும் கவலை ஏற்பபடுத்தியுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
இதுதொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள் (SLC) வீரர்களின் பயிற்சிகளுக்கு பொறுப்பான அதிகாரிகள் மற்றும் தேர்வாளர்களிடமிருந்து விரிவான விளக்க அறிக்கையொன்றையும் கோரியுள்ளது.
2023 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடரின் 33 ஆவது போட்டி இந்தியாவின் வான்கடே மைதானத்தில் நேற்று (02) நடைபெற்றது.
போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட்டது.முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 357 ஓட்டங்களை பெற்றது.
இலங்கை அணி 19.4 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 55 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது.
இலங்கை அணி சார்பில் கசுன் ராஜித்த 14 ஓட்டங்களையும், ஏஞ்சலோ மெத்தீவ்ஸ் 12 ஓட்டங்களையும் மற்றும் மகேஸ் தீக்ஷன 12 ஓட்டங்களையும்பெற்றுக் கொண்டனர். ஏனைய அனைத்து வீரர்களும் 10 ஐ விட குறைந்த ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தமை குறிப்பிடத்தக்கது. இதில் 5 வீரர்கள் எவ்வித ஓட்டங்களையும் பெறவில்லை.
பந்து வீச்சில் Mohammed Siraj 3 விக்கெட்டுக்களையும், Mohammed Shami 5 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.
போட்டியின் ஆட்டநாயகனாக 18 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை வீழ்த்திய Mohammed Shami தெரிவு செய்யப்பட் டார். இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 2023 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடரின் அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ளது.