“இலங்கையை வெற்றி கொள்வோம்”

தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் ஏற்பாட்டில் “இலங்கையை வெற்றி கொள்வோம்”நாடுதழுவிய மக்கள் நடமாடும் வேலைத் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் கௌரவ மனுஷ நாணயக்காரர அவர்களின் தலைமையில் (31) அனுராதபுரம் சல்காத்து விளையாட்டு மைதானத்தில் ஆரம்பமானது.
இந்நிகழ்வு இன்றும் (31) , நாளையும் (01 பெப்ரவரி) அமைச்சரின் தலைமையில் நடைபெறும் .
இங்கு வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்கு தொழிற் பயிற்சி வழக்குவது தொடர்பாக மக்களுக்கு தெளிவுபடுத்தும் நிகழ்வு , தொழிலாளர்களுக்கு கௌரவத்தையும், பாதுகாப்பையும் வழங்கும் கருசரு வேலைத்திட்ட நிகழ்வும் நடைபெறவுள்ளன.