இலங்கையில் வெப்பநிலை அதிகரித்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
‘எச்சரிக்கை நிலைமை அல்லது கவனம் செலுத்த வேண்டிய நிலைமை என திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உடல் உஷ்ண நிலையை உணர முடியும் நிலை என்பதால் இது குறித்து கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது குறிப்பிட்டுள்ளது.
இதற்கமைவாக வடக்கு, வடமத்திய, வடமேற்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் மொனராகலை மாவட்டத்திலும் சில இடங்களில் இந்த வெப்ப நிலை எதிர்பார்க்கப்படுகிறது. நீண்ட நேரம் வெளியில் இருப்பதாலும் , நடவடிக்கைகளில் ஈடுபடுவதாலும் சோர்வு நிலை ஏற்படக்கூடும் மேலும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதன் மூலம் நீரிழப்பு மற்றும் நீரிழப்பு காரணமாக தசைப்பிடிப்புகள் ஏற்படும் என்றும் திணைக்களம் தெரிவித்துள்ளது.
தற்போதைய நிலையை கருத்தில் கொண்டுஇ பணிபுரியும் போது போதுமான அளவு தண்ணீர் குடிக்கவும், நிழலான இடத்தில் ஓய்வெடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. முதியவர்கள் மற்றும் நோய்வாய்ப்பட்டவர்கள் கூடுதல் கவனத்துடன் செயலபடவேண்டும் என்றும், சிறு குழந்தைகளை தனியாக வாகனங்களில் அழைத்துச் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் மக்கள் வெள்ளை அல்லது வெளிர் நிற ஒளி ஆடைகளை அணியுமாறு அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டுள்ளன.
காலநிலை மாற்றத்தால் ஆசியாவில் வெப்பநிலை எதிர்பாராதவிதமாக உயர்ந்துள்ளதாக சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
கடந்த மாதத்தில் ஆசியாவின் பல நாடுகளில் வெப்பநிலை 02 பாகை செல்சியஸ் ஆக அதிகரித்துள்ளது. இந்தியா, பங்களாதேஷ்,தாய்லாந்து, லாவோஸ், சீனா, இந்தோனேசியா, சிங்கப்பூர் மற்றும் பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகள் வெப்பநிலை அதிகரிப்பை உணர்ந்தன. அந்த நாடுகளில் ஏப்ரல் மாதத்தில்வெப்பநிலை 45 டிகிரி செல்சியஸாக அதிகரித்திருப்பதாக இதுதொடர்பான அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.