இலங்கையில் சிறுவர்களின் உயரத்திற்கு அமைவாக உடலின் எடை முதலானவையில் சரியாக வளர்ச்சி இடம்பெறவில்லை என மத்திய வங்கி வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் நிலவிவரும் ஊட்டச் சத்து குறைபாடு பிரச்சினை நீடித்து வருவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பெருந்தோட்ட தொழில் துறையில் ஐந்து வயதுக்குட்பட்ட சிறுவர்களில் 29 வீதமானோர் குறைவான எடை கொண்டவர்கள் என்றும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.