இலங்கை மத்திய வங்கியின் நிதியியல் உளவறிதல் பிரிவானது “பணம் தூயதாக்கலுக்கெதிரான மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியளித்தலை ஒழித்தல் இணங்குவிப்பு கடப்பாடுகள் மற்றும் புதிய அபிவிருத்திகள்” பற்றி 2023 யூலை 04 அன்று இரத்தினக்கல் மற்றும் ஆபரணத் துறைக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சியொன்றை ஏற்பாடுசெய்தது.
இலங்கை மத்திய வங்கியின் ஆளுநரும்/பணம் தூயதாக்கலுக்கெதிரான மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியளித்தலை ஒழித்தல் மீதான தேசிய ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான முனைவர் நந்தலால் வீரசிங்க தலைமை உரையினை நிகழ்த்தியதுடன் கைத்தொழில் அமைச்சின் செயலாளர் திருமதி. திலகா ஜயசுந்தர, தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபையின் தலைவர் திரு. விராஜ் த சில்வா, இலங்கை இரத்தினக்கல் மற்றும் ஆபரண அமைப்பின் தலைவர் திரு. அஜ்வாதீன் மற்றும் இலங்கை இரத்தினக்கல் வணிகர்கள் மற்றும் அகழ்வோர் அமைப்பின் தலைவர் யு. ஜி. சந்திரசேன ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.
இந்நிகழ்வில் தொழிற்துறையைச் சேர்ந்த 100 இற்கும் அதிகமானோர் பங்கேற்றனர்.
இரத்தினக்கற்கள் மற்றும் ஆபரணங்கள் அத்துடன் அருமையான உலோகங்கள் மற்றும் கற்கள் தொழிற்துறையானது இலங்கையின் பொருளாதாரத்திற்கு முக்கிய பங்களிக்கும் துறையாக திகழ்கின்றது.
உலக சந்தைக்கு அருங்கற்களை ஏற்றுமதி செய்கின்ற ஒன்பதாவது பாரிய ஏற்றுமதியாளராகவும் உலகில் ஐந்து மிக முக்கிய இரத்தினக்கற்களைக் கொண்ட தேசங்களிலொன்றாகவும் இலங்கை விளங்குகின்றது.
இலங்கை, உயர்தர இரத்தினக்கற்களை உலகிற்கு தொடர்ச்சியாக வழங்கும் நாடுகள் மத்தியிலும் இடம்பிடித்துள்ளது. எவ்வாறாயினும், பொருளாதாரத்திற்கான இலங்கையின் ஏற்றுமதிப் பங்களிப்பானது இரத்தினக்கற்கள் மற்றும் ஆபரண வணிகத்திற்கு சர்வதேச மையமாகவும் ஏற்றுமதி வருவாயில் ஏறத்தாழ ஐ.அ.டொலர் 12 பில்லியனையும் ஈட்டுகின்ற தாய்லாந்து, ஐ.அ.டொலர் 30 பில்லியனை எட்டுகின்ற ஹொங்ஹொங் போன்ற வேறு உலகளாவிய பங்குதாரர்களுக்கு ஒப்பாக இன்னும் தோற்றம்பெறவில்லை.
மத்திய வங்கி ஆண்டறிக்கை 2022இன் பிரகாரம், இலங்கை 2022 காலப்பகுதியில் இரத்தினக்கற்கள், வைரக்கற்கள் மற்றும் ஆபரணங்கள் என்பவற்றிலிருந்தான ஏற்றுமதி வருமானமாக ஐ.அ.டொலர் 450 மில்லியனை ஈட்டியுள்ள அதேவேளை கடந்த 5 ஆண்டுகளுக்கான ஆண்டுச் சராசரி ஐ.அ.டொலர் 298 மில்லியனாக இருந்தது.
முழுவடிவம்