‘இரண்டு முகம் கொண்டவர்களையே சஜித்துக்கு பிடிக்கும்’ என்கிறார் ஹிருணிகா

பகலில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவுடனும், இரவில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடனும் தொடர்புள்ளவர்களே தற்போதைய ஜக்கிய மக்கள் சக்தியில் ஆதிக்கம் செலுத்துவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர தெரிவித்துள்ளார்.

கட்சிக்காக அயராது உழைத்த, தன்னைப் போன்ற அர்ப்பணிப்பைகொண்டவர்களிலும் பார்க்க  போலித்தனமான நபர்களையே எதிர்க்கட்சித்தலைவர் நம்புகிறார் என்றும் அவர் கூறுகிறார்.

ஜக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ச அத்தநாயக்க கலந்துகொண்ட கூட்டமொன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இந்த விடயங்களை குறிப்பிட்டார்.

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன