நாடடின் மேல்,சப்ரகமுவ, மத்திய, வடமேல், மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் சில இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் இன்று காலை (18) வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கு மற்றும் வடமேற்கு கரையோரப்பிரதேசங்களிலும் யாழ்ப்பாணம்மாவட்டத்திலும் காலை வேளையிலும் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும்வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள் என்றும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.