இந்தியாவில் புலிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு

இந்தியா மற்றும் பூட்டானில் புலிகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக சமீபத்திய தகவல்கள் ஆய்வுஅறிக்கைகள் மூலம் தெரியவந்துள்ளன.

தற்போது இந்தியாவில் 3,700 புலிகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது உலக நாடுகளில் உள்ள புலிகளின் எண்ணிக்கையில் 70 வீதமாகும். பூட்டானில் உள்ள புலிகளின் எண்ணிக்கை 2015ம் ஆண்டுக்கு அமைவாக 27 வீதத்தால் அதிகரித்துள்ளது.

இதேவேளை உலக புலிகள் தினம் ஆண்டுதோறும் ஜூலை 29 ஆம் திகதி கடைபிடிக்கப்படுகிறது. கடந்த 200 ஆண்டுகளில் உலகில் புலிகள் 9 வகையான இனங்களாக இருந்துள்ளன.

இன்று அதில் 3 இனங்கள் முற்றிலும் அழிந்துவிட்டன. மற்ற 3 இனங்கள் அழிவுக்கு மிக நெருக்கமாக உள்ளன. இந்த இனங்களில் இருக்கிற ஒரு சில நூறு புலிகள் இறந்துவிட்டால் அந்த 3 இனங்களின் புலிகள் இல்லை என்றாகிவிடும். புலிகளின் ஆயுட்காலம் காடுகளில் 9 முதல் 14 ஆண்டுகளாகும்.

இந்தியாவில்  புலிகளை ‘வங்காளப் புலி’ அல்லது ஹராயல் பெங்கால் புலி’ என அழைக்கப்படுகிறது. இந்த வங்காள புலியின் எண்ணிக்கை உலகளவில் கிட்டதட்ட 4 500-ஐ நெருங்கி இருக்கும் என்கிறார்கள். இதில்இ 3,000 புலிகள் இந்தியாவில்  உள்ளன. 2018 கணக்கெடுப்பின்படி 2,967 புலிகள் இந்தியக் காடுகளில் உள்ளதாக கூறப்படுகிறது. கணக்கெடுப்பில் சிக்காதவற்றையும் சேர்த்தால் அவற்றின் எண்ணிக்கை 3,346 ஆக இருக்கலாம்.

நான்கு ஆண்டுக்கு ஒருமுறை புலிகள் கணக்கெடுப்பு நடக்கும். 5-வது ஆண்டில் மொத்தமாக கணக்கெடுப்பின் முடிவுகளை அறிவிப்பார்கள். இந்த ஆண்டு நடந்த கணக்கெடுப்பில் புலிகளின் எண்ணிக்கை 3 ஆயிரத்தைக் கடந்து இருப்பது மிகவும் மகிழ்ச்சியான செய்தி என்று மதுரையைச் சேர்ந்த வன உயிரின ஆர்வலர் ரவீந்திரன் நடராஜன் தெரிவித்துள்ளார்.

புலிகள் கணக்கெடுப்பு காடுகளில் ஒரு வாரத்துக்கு நடக்கும். முதல் 3 நாட்கள் வரையறுக்கப்படாத எல்லைப் பகுதிகளில் வன அலுவலர்கள், தன்னார்வலர்கள் பயணிப்பார்கள். இந்தப் பயணத்தில் புலிகள் நேரடிப் பார்வையில் தென்படுவது அபூர்வமாகும். புலிகளின் பாதச்சுவடுகள், எச்சங்கள், அதன் வாழ்விட எல்லைகளைக் குறிக்கும் குறியீடுகளைக் கொண்டு முதற்கட்டமாக புலிகள் கணக்கெடுக்கப்படுகிறது.

சில இடங்களில் சிறுநீர் கழித்து வைக்கும். அதன் மணத்தை வைத்துக்கூட புலிகளின் இருப்பைத் தெரிந்து கொள்ளலாம். இதற்குப் பிறகு காடுகளில் மற்ற 2 ஆம் கட்ட கொல்லுண்ணிகளான செந்நாய், நரி போன்றவற்றையும் கணக்கெடுப்போம். அதற்கு அடுத்த 3 நாட்களில் தாவர உண்ணிகளை பற்றிய கணக்கெடுப்பு போகும். அதன் எச்சங்கள், வாழ்விடங்கள் கணக்கெடுக்கப்படும்.

தாவர உண்ணிகளின் ஒரு கூட்டம், மதிப்பீடு செய்யப்படும். இவ்வளவு தாவர உண்ணிகள் இருந்தால் இது ஒரு புலிக்கான இரையாகும் என்று கணக்கிடப்படுகிறது. தாவரங்களை அதிகம் உண்ணும் விலங்குகளைக் கொண்டும் புலிகள் கணக்கெடுக்கப்படுகின்றன. புலிகள் கணக்கெடுப்பு ஒரு நாட்டின் உயிர் தன்மையை கணக்கெடுக்கக் கூடிய சிறப்பான செயல் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன