அடுத்த மாதத்திற்குள் பணவீக்கம் குறைவடையும் – அரசாங்கம் நம்பிக்கை

அடுத்த மாதத்திற்குள் பணவீக்கம் 7 தொடக்கம் 8 வீதம் வரை குறைவடையும் என்று நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இதேவேளை நாட்டில் வெளிநாட்டு நிதிக் கையிருப்பு 3 தசம் 5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வரை அதிகரித்துள்ளது.

பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்து, வேகமாக வளர்ந்துவரும் நாடாக இலங்கை சர்வதேச ரீதியில் முன்னுதாரணமாக திகழ்வதாகவம் அவர் சுட்டிக்காட்டினார்.

ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு அவர் இந்த விடங்களை குறிப்பிட்டார்.

சர்வதேச நாணய நிதியத்தின் யோசனைகளை நடைமுறைப்படுத்தும் போது பயனுள்ள கருத்துக்களை ஏற்றுக்கொள்வதற்கு அரசாங்கம் தயாராகவுள்ளது. பரிஸ் குழுமம் உள்ளிட்ட தரப்புக்கள் யோசனை முன்வைப்பதற்கு இருந்த வாய்ப்புக்கள் மூலம் பயன்பெறாத எதிர்க்கட்சி பொது எதிர்ப்பை மாத்திரம் காட்டுவது கவலைக்குரிய விடயமாகும் என்றும நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன