வெளிநாட்டு தொழில் வாய்ப்புகளை வழங்குவதற்காக பணம் வசூலிக்கும் மோசடி – விசேட விசாரணை

வெளிநாட்டு தொழில் வாய்ப்புகளை  வழங்குவதற்காக பணம் வசூலிக்கும் மோசடிகள் தொடர்பில் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இதுதொடர்பாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் திரு.மனுஷ நாணயக்கார தெரிவிக்கையில் ,

தனது பிரத்தியேக பணிக்குழாமின் அதிகாரிகள் என தெரிவித்து  இவெளிநாட்டு தொழில் வாய்ப்புகளை  வழங்குவதற்காக பணம் வசூலிக்கும் மோசடிகள் தொடர்பில் விசேட விசாரணை நடத்தப்படுவதாகவும், இவ்வாறான நபர்களுடன் மேற்கொள்ளப்படும் எந்தவொரு பணப் பரிமாற்றல் அல்லது உறுதிமொழிக்கும்   தாம் பொறுப்பல்ல என்றும் அமைச்சர் திரு.மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.

தனது பிரத்தியேக பணிக்குழாமின் அதிகாரிகள் என தெரிவித்து  ,வெளிநாட்டு தொழில் வாய்ப்புகளை  வழங்குவதற்காக தற்போது பணம் வசூலிக்கும் மோசடிகள் குறித்து விசேட விசாரணை நடத்தப்படுவதாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் திரு.மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்

இவ்வாறான நபர்களுடன் மேற்கொள்ளப்படும் எந்தவொரு பணப் பரிமாற்றல் அல்லது உறுதிமொழிக்கும்   தாம் பொறுப்பல்ல வெளிநாட்டு தொழில்வாய்ப்புகளை வழங்குவதற்காக தனது பணிக்குழாமுக்கு உட்பட்ட எந்தவொரு அதிகாரியும் பணம் வசூலிப்பதில்லை என்றும்,  சட்ட ரீதியலான வேலைவாய்ப்பு முகவர் நிறுவனத்தைத் தவிர வேறு எவருக்கும் வெளிநாட்டு வேலைகளுக்கு மக்களைப் பரிந்துரைக்கும் திறன்; இல்லை என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தொழிலாளர்களை வெளிநாட்டு வேலைவாய்ப்பில் ஈடுபடுத்துபவர்கள் இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் மற்றும் சட்ட ரீதியிலான வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையங்கள் மாத்திரமேயாகும். இதற்கு அப்பால் , எந்த ஒரு நபரும் தொழிலாளர்களை வெளிநாட்டு வேலைக்கு அனுப்ப முடியாது, அத்தோடு வெளிநாட்டு வேலை வழங்கப்படும் என்று கூறி பணம் பெறுவது சட்ட விரோத செயற்பாடாகும்.

அமைச்சரின் பணிக்குழாம்  என்று கூறி தொழிலுக்காக  பணம் வாங்கியதாக குற்றம் சாட்டப்பட்டவர்கள் எவரும் அமைச்சரின் பிரத்தியேக பணிக்குழாமின்  அதிகாரிகள் அல்ல அமைச்சரின் பிரத்தியேக ஊழியர்களில் பின்வரும் அதிகாரிகள் மட்டுமே உள்ளனர் என்றும் தெரித்துள்ளார்.

திரு. ஷான் யஹம்பத் – பிரத்தியேக செயலாளர்

திரு.சஞ்சய நல்லபெரும – ஊடக செயலாளர்

திரு.தேசப்பிரிய லியனகே – ஒருங்கிணைப்புச் செயலாளர்

திரு.பாக்ய காரியவசம் – ஒருங்கிணைப்புச் செயலாளர்

திரு. சுனேத் அத்துகோரல – மக்கள் தொடர்பு அதிகாரி

திரு. உதயங்க சூரியராச்சி – பாராளுமன்ற அலுவல்கள் செயலாளர்

பிரியங்கர விஜேசேகர – இணைப்பு அதிகாரி (பாராளுமன்ற ஊழியர்கள்)

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன