வடமத்திய மாகாணத்தில் TOM EJC ரக மாம்பழ ஏற்றுமதி ஊக்குவிப்பு வலய அபிவிருத்திக்கு பெருந்தோட்ட கைத்தொழில் மற்றும் ஏற்றுமதி விவசாய அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
இதற்கான திட்டம் திறப்பனை பிரதேச செயலகப் பிரிவில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
2020 ஆம் ஆண்டு முதன் முறையாக ஆரம்பிக்கப்பட்ட இத்திட்டம் இரண்டு கட்டங்களாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. அனைத்து கிராம அலுவலர் பிரிவுகளையும் உள்ளடக்கிய 2371 பயனாளிகளுக்கு இது வரை 51 ,000 க்கும் அதிகமான மா மரக் கன்றுகள் விநியோகிக்கப்பட்டுள்ளன. இதன் கீழ் மா மரக் கன்றுகளை உரிய முறையில் நடுவதற்கான போதியளவு நிலம் உள்ளதா என பரிசீலிக்கப்பட்டு , தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு TOM EJC ரக மாங்கன்றுகள் வழங்கப்பட்டன.
தோட்ட மற்றும் வணிகப் பயிர்களாக பயிரிடப்பட்ட மா மரக்கன்றுகள் தற்போது காய்க்கும் நிலையை எட்டியுள்ளன. மாம் பழ உற்பத்திக்கு தேவையான பயிற்சிகள் அவ்வப்போது விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு பொறுப்பான பொருளாதார மேம்பாட்டு அதிகாரிகளால் அதன் முன்னேற்றம் கண் காணிக்கப்படுகிறது.