யாழ்ப்பாண மாவட்டத்தில் போதைப்பொருள்: 15 பேர் கைது

யாழ்ப்பாண மாவட்டத்தில் போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபடுவோர் மற்றும் போதைப் பொருளுக்கு அடிமையானோரை கைது செய்யும் நடவடிக்கைகள் தீவரமாக இடம்பெற்றுவருகிறது.

கல்வியங்காடு, கோப்பாய், யாழ்ப்பாணம், நல்லூர் பகுதிகளைச் சேர்ந்த 20 தொடக்கம் 30 வயதுக்கு இடைப்பட்ட இளைஞர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன் அடிப்படையில் நேற்று (08) 15 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக, மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் மஞ்சுள செனரத் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபடுவோர் மற்றும் போதைப் பொருளுக்கு அடிமையானோரை கைது செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் யாழ்.மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் மஞ்சுள செனரத் மேலும் தெரிவித்துள்ளார்.

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன