யாழ்ப்பாணம் பழைய பூங்கா வீதியில் உள்ள இலங்கை மின்சார சபையின் பிரதி பொது முகாமையாளர் அலுவலகத்தில் மின் கட்டணம் செலுத்தும் பிரிவு ,பொதுமக்களின் நன்மை கருதி சனிக்கிழமைகளிலும் செயற்படவுள்ளது.
வடமாகாண பிரதிப் பொது முகாமையாளர் பொறியியலாளர் செ.பிரபாகரன் இது தொடர்பில் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள செய்திக் குறிப்பில் எதிர்வரும் 10 ஆம் திகதி முதல் தினமும் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை மின் கட்டணம் செலுத்தும் பிரிவு பொது மக்களுக்காக திறந்திருக்கும் என குறிப்பிட்டுள்ளார்.