பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார் ல்ஸ்க்கு புற்றுநோய்

பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார் ல்ஸ் புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்றுவருவதாக பக்கிங்ஹாம் (Buckingham) அரண்மனை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
புற்றுநோய்க்கான சிகிச்சைகளை அவர் நேற்று (5) ஆரம்பித்ததாகவும் அரண்மனை தெரிவித்தது.

பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத் மறைவையடுத்து அவரது மகன் சார் ல்ஸ், பிரிட்டனின் மன்னராக கடந்த 2022-ம் ஆண்டு அறிவிக்கப்பட்டு பின் முறைப்படி மன்னர் மூன்றாம் சார் ல்ஸ் ஆக முடிசூட்டிக்கொண்டார்.