ஒருங்கிணைந்த தொழில் சட்ட கட்டமைப்பை தயாரிப்பதற்காக இதுவரை முன்வைக்கப்பட்டுள்ள யோசனைகளின் தொகுப்பு எதிர்வரும் 14ஆம் திகதி தேசிய தொழில் ஆலோசனை சபையிடம் சமர்ப்பிக்கப்படும் என்று தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் திரு மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.
புதிய தொழில் சட்ட கட்டமைப்பை தயாரிப்பதற்கான முன்மொழிவுகளை பெற்றுக்கொள்வதற்காக தொழிற் சங்கங்கள் ,பொது மக்கள் மற்றும் தொழில் துறைகளை சார்ந்த விரிவுரையாளர்கள் சட்டத்தரணிகள் ஆகியோரின் ஆலோசனைகள் கருத்துக்களை கேட்டறிவதற்கான கலந்துரையாடல் ஒவ்வொரு வாரமும் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெறுகிறது. இத்தொடரின் ஆறாவது கலந்துரையாடல் இன்று அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இதன் போது
தேசிய தொழில் ஆலோசனை சபையில் நேற்று மாலை நடைபெற்ற கூட்டத்தில் எட்டப்பட முடிவுகளை அமைச்சர் விபரிக்கையில் அமைச்சர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.
புதிய தொழில் சட்ட கட்டமைப்பை தயாரிப்பதற்காக சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவுகளின் தொகுப்பு சமர்ப்பித்த பின்னர் ,சட்டமூல வரைவை தயாரிக்கும் பணி ஆரம்பிக்கப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். செப்பமற்ற வரைவு (Rough draft) தேசிய தொழில் ஆலோசனை சபையிடம் சமர்ப்பிக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.
செப்பமற்ற வரைவு (Rough draft) தொடர்பில் ஏதேனும் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று எவராவது தெரிவித்தால் அதற்கும் இடமளிக்கப்படும். அதனைத்தொடர்ந்து ஜூன் மாத இறுதியளவில் இதுதொடர்பிலான சட்ட மூலம் அமைச்சரவையில் அமர்ப்பிக்கப்படும். அதன் பின்னர் பாராளுமன்றத்தின் அனுமதிக்காக இதனை சமர்ப்பிக்க எதிர்பார்த்துள்ளளோம். இது தொடர்பில் மேதலதிக நடவடிக்கையை மேற்கொள்ள விரும்புபவர்களுக்கு நீதி மன்றம் செல்லவும் சந்தர்ப்பம் உண்டு என்று தெரிவித்த அமைச்சர் அனைவரின் ஒருமித்த இணக்கப்பாடுடனேயே சட்ட மறுசீரமை மேற்கொள்வோம் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
தேசிய தொழில் ஆலோசனை சபையை மாதாந்தம் கூட்டுவதன் முக்கியத்துவத்தையும் அமைச்சர் சுட்டிக்காட்டியதுடன் தேசிய தொழில் ஆலோசனை சபையை பிரதிநிதித்துவப்படுத்தப்படும் தொழிற்சங்க பிரதிநிதித்துவத்தில் ஏதேனும் ஒரு துறையைச் சேர்ந்தவர்கள் , இடம்பெற தவறியிருந்தால் இதுதொடர்பான விடயங்களை ஆராய்ந்து தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள ஒரு குழுவை நியமிப்பதற்கும் தேசிய தொழில் ஆலோசனை சபை இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
தேசிய தொழில் ஆலோசனை சபையில் தொழிற்சங்கங்கள் பெண்களின் பிரதிநிதித்துவத்தை முன்வைக்காததால், கூடுதலான பெண் அங்கத்துவர்களைக்கொண்ட தொழிற்சங்கப் பிரதிநிதியை நியமிக்க தேசிய தொழில் ஆலோசனை சபை அங்கீகாரம் அளித்தாகவும் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் திரு மனுஷ நாணயக்கார மேலும் தெரிவித்தார்.