தொழிலுக்காக வெளிநாடு செல்லும் கிராம பெண்களிடம் ஆங்கில மொழியில் பேசும் விமானப் பணிப்பெண்கள் -அமைச்சர் மனுஷ குற்ச்சாட்டு

வெளிநாட்டு வேலைவாய்ப்பு முறைகேடுகளுக்கு விமான நிலையத்தின் சகல பிரிவுகளினதும் ஒத்துழைப்பு கிடைப்பதாகவும் மனித வாணிகஞ் செயற்பாடுகளை தடுப்பதற்காக   அரசாங்கம் முன்னெடுக்கும்  வேலைத்திட்டத்திற்கு குடிவரவு குடியகல்வு திணைக்களம் ஆதரவளிக்கவில்லை என்றும் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் திரு.மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் நேற்று (21) பாதுகாப்பான இடம்பெயர்வு ஊக்குவிப்பு பிரிவை (Safe Migration Promotion Unit – SMPU)’  திறந்துவைக்கும் நிகழ்வில் கலந்துகொண்ட போதே அமைச்சர் இந்த விடயங்களை குறிப்பிட்டார்.

 அமைச்சர் அங்கு மேலும் உரையாற்றுகையில், “ அரசாங்க அதிகாரிகள் இன்று தமது பொறுப்புகளை அச்சத்துடனேயே நிறைவேற்றுகின்றனர்.பொறுப்பை நிறைவேற்றக்கூடிய இராணுவ அதிகாரிகள்  இன்னும் பட்டியலில் இருக்கின்றனர்.

அவர்கள் பொறுப்புகளை நிறைவேற்றியதினால் தான் நாம் இன்று  நாடு என்ற வகையில் நாம் அனைவரும் சிறப்பாக இருக்கின்றோம். சில உத்தியோகத்தர்கள் தமது கடமைகளை நிறைவேற்றுவதில் ஈடுபட்டதினால்  இன்னமும் சிரமத்தில் இருக்கின்றனர். எமது அமைச்சின் செயலாளர் அவர்கள்  நாட்டு மக்களுக்கான சட்டங்களை அமுல்படுத்துவதில் ஈடுபட்டதினால்  நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளார். பாராளுமன்றத்தினால் வழங்கப்பட்ட அதிகாரத்தை நடைமுறைப்படுத்தியதினால் அவருக்கு இந்த நிலை ஏற்பட்டுள்ளது. இங்கு பணிபுரியும் அதிகாரிகள் சட்டத்தை அமுல்படுத்துவதில் மிகவும் கவனமாக செயல்படுகின்றனர்.  ஏனெனில் மக்களின் சில சில  சுதந்தி;ரத்துடன் தொடர்புபட்ட விடயங்கள் அரசியலமைப்புச் சட்டத்தில்  தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. யாராவது ஒருவர் எங்காவது செல்கிறார்; என்றால், அவரைத் தடுத்து நிறுத்த, அது குறித்து கேள்வி கேட்பதற்கு உள்ள அதிகாரம் என்ன என்று கேட்கும் நேரங்களும் உண்டு. அப்போது சில அதிகாரிகள் தயங்குவர்கள்” என்றார்

“வெளி நாட்டிலிருந்து ஒரு பெண் பிரச்சனையை எதிர்கொண்டு நாட்டுக்கு வரும்போது, விமான நிலையத்தில் உள்ள ஊடகவியலாளர்  அதை வீடியோ எடுத்து இரவு செய்திகளிலும், ஃபேஸ்புக்கிலும் செய்திகளை வெளியிடுகிறார்கள். அதனை பார்வையிடுவோர் தெரிவிக்கும் கருத்துகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றன. நாடு முழுவதும் மக்கள் அது குறித்து பேசுவார்கள். 10 ஆண்டுகளுக்கு முன்னர்  வெளிநாடு சென்ற நபருக்காக நான் தூற்றப்படுகின்றேன். நான் நிம்மதியாக சாந்தம் பெறட்டும் என கூறுகின்றனர். . அப்படி தெரிவிப்பது எவ்வளவு நல்லது. அதைத்தான் நாம் அனைவரும் பிரார்த்திக்கின்றோம்.

ஆனால் இந்த நாட்டு மக்கள் நாட்டை விட்டு வெளியேறுவதற்கு முன் அவர்கள் அறிந்துகொள்ள வேண்டிய விடயங்களை தெளிவுபடுத்துவதற்கு  ஊடகவியலாளர்கள் எவரும் எமக்கு உதவுவதில்லை. இது தவறு, தவறான வழியில் செல்லாதீர்கள் என்பதை தெளிவுபடுத்துதற்காக  எந்த  ஊடகமும் அதற்கான ஒளிபரப்பு நேரத்தை ஒதுக்கவில்லை. இதுபற்றி அதிகாரிகள் தெளிவுபடுத்தி  சட்டத்தை அமுல்படுத்தி  ,முறைகேடுகளில் ஈடுபடுவோர்  கைது செய்யப்பட்டால் மறுநாள் அவர்களுக்கு இலகுவாக பிணை கிடைத்துவிடும். சிலர் நீதிமன்றத்திற்கு வந்து அதிகாரிகளுக்கு எதிராக வாதிடுவார்கள். ஆனால் இவர்களை பற்றி பேச யாரும் முன்வருவதில்லை” என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தைச் சேர்ந்த ஒருவர்  யாரையாவது திருப்பி அனுப்பினால் அது குறித்து சிலர் சட்டம் பேச வருவார்கள். குடி அகல்வு  வாயிலுக்கு அப்பாலுள்ள அதிகாரிகள் அங்கு வந்து அவரை அழைத்துச்செல்ல வேண்டும் என்று கூறுவார்கள். இல்லை வேண்டாம் , அவர் இந்த விமானத்தில் செல்லவே வேண்டும் என்று கூறுவதற்கு உங்களுக்கு உள்ள அதிகாரம் என்ன.

அவரைத் தடுக்க வேண்டும் என்று குடியகல்வுவின் முன்னாள் அதிகாரிகள் இழுத்துச்செல்லுகின்றனர்  விமான நிலையத்தின் பாதுகாப்பு அதிகாரிகள் உங்களுக்கு உரிமை இல்லை என்று கூறி இழுத்துச் செல்வார்கள்.

ஏர்லைன்ஸ் அதிகாரிகள் இழுத்துச்செல்வார்கள்   அவரைத் தடுக்க உங்களுக்கு அதிகாரம் இல்லை என்று கூறுகிறார்கள். ஆம் உண்மையே  சட்டத்தின் மூலம் எமக்கு  அதிகாரம் அளிக்கப்படவில்லை. நாட்டின் தேவையையும் இம்மக்களை பாதுகாப்பதற்கான  கடமையையும் நாம் நிறைவேற்ற வேண்டியிருந்தது. இப்போது அந்த அதிகாரத்தை சட்டத்தின் மூலம் பெற்றுள்ளோம். அத்தோடு, நாடாளுமன்றத் தெரிவுக் குழுவும் அதற்கு எங்களுக்கு ஒத்துழைப்பு வழங்கியது. ஜனாதிபதி, பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில், சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரையும் ஒன்றிணைத்து தேவையான ஆதரவை வழங்கினார்.

இது பாதுகாப்பு அமைச்சின் தலைவரால் செய்யப்பட வேண்டிய வேலை. பாதுகாப்பு அமைச்சின் தலைமையின் கீழ், CID வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம், விமான நிலையம் குடிவரவு குடியகல்வு  திணைக்களம் என்பன இணைந்து செயற்பட வேண்டிய விடயம். இதை யாரும் தனியாக செய்ய முடியாது. அனைவரின் உதவியும் தேவை. இந்தப் பணிகளை அனைவரும் ஒன்றிணைந்து செய்ய வேண்டும்.

இந்த விமான நிலையத்தின் ஊடாக இந்தியாவுக்கான யாத்திரைக்காக போவதாக தெரிவிக்கின்றனர். சில சமயங்களில் சலூனுக்கு பொருட்களை கொண்டுவருவதற்காக  செல்வதாக கூறுவார்கள்.அக்காவை பார்ப்பதற்காக மாமியை பார்ப்பதற்காக என்றெல்லாம் கூறக்கூடிய அனைத்தையும் கூறுவார்கள். இவ்வாறு தான் எமக்கும் சொல்லப்பட்டுள்ளது. அந்த சாரியை அணிந்த  பெண்ணிடம் போகச் சொல்லித்தான் அனுப்பப்படுவார்கள்.  அதோ பாருங்க சார், முடியை சீவுவதைப் பாருங்க, பேனாவை உயர்த்திக்காட்டுபவரை பார்த்துக்கொள்ளுங்கள். வெளிநாடு செல்வதற்கு நீங்கள் தேர்ச்சி பெற்றீர்கள் என்று சொல்லுங்கள். அப்போது உங்களுடைய  பாஸ்போர்ட்டை (கடவுச்சீட்டை) அவ்வளவாக பார்க்க மாட்டார்கள். சுமாராக பார்த்துவிட்டு அனுப்பிவிடுவார்கள்.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம், விமான நிலைய நிறுவனம், குடியகல்வு முதலானவற்றின் பலரை   ஒன்றாக தொடர்புபடுத்தி உள்ளே வருபவருக்கு ஆடைகளை மாற்றிக்கொள்வதற்கான  வசதி செய்யப்படுவது ‘வோஸ் ரூம்மில்’ தான். அங்கு வைத்து தான் பாஸ்போட் (கடவுச்சீட்டு) மற்றும் ஏனையவற்றை இந்த முறைகேடான நடவடிக்கைகளுக்கு வழங்குவார்கள்.

இங்கு வரும்போது வேறு பாஸ்போர்ட்டில் (கடவுச்சீட்டில்). தான் உள்ளே வருகிறார்கள், உள்ளே வழங்கப்படுவது அதற்குப் பதிலாக வேறு பாஸ்போர்ட. இதெல்லாம் ஒட்டுமொத்த திட்டமிட் வேலை. இதை ஒருவரினால் மட்டும்  தனித்து தடுத்து நிறுத்த முடியாது.  இந்த செயற்பாடு நிறுத்தப்படாதவரை  இது அவர்களுக்கு நல்லது. ஒவ்வொருவரின் பைகளிலும் ரூபா 15,000 படி பண நோட்டுக்கள் விழும். இந்த விடயத்தை நாம் அறிவோம்.  ஆனால் இறுதியில்  நம் மக்கள் அந்த நாடுகளுக்குச் சென்று அங்கு தவிப்பார்கள். எங்கள் மக்கள் அவதிப்படுவார்கள். அவர்களை அங்குள்ள வீடுகளில் இருந்து வெளியேற்றுவார்கள். அப்போது அவர்களுக்கு உதவ எவரும் இல்லை.

இவ்வாறானவர்கள் முறையாக பதிவுகளை மேற்கொண்டு சென்றவர்கள் அல்ல. இவர்களை திரும்ப நாட்டுக்கு அழைத்து வர சட்ட ரீதியிலான அதிகாரம் எமக்கு இல்லை. வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் பதிவு செய்யப்படாத ஒருவரை அழைத்து வருவதற்கு யார் அதற்கான செலவுத்தொகையை வழங்குவது. இவர்கள் தமது வாழ்க்கையை இழக்கிறார்கள். எல்லையை கடக்கும்போது பல்வேறு பிரச்சினைகள் ஏற்படும்.  அந்த உயிர்களுக்கு யார் இழப்பீடு வழங்குவது ? இந்தப் பெண்கள் பற்றி மட்டுமல்ல. இங்கு ஏராளமானோர் இவ்வாறு  செல்கின்றனர். படகுகளில் சிலர் மட்டுமே செல்கின்றனர்.

இதை கண்டுப்பிடித்து தடுக்காவிடில் நம் நாட்டு மக்களின் வாழ்க்கை சீரழிவதில்  முதலிடம், இந்த நாட்டின் நற்பெயருக்கு கலங்கம் என்பது இரண்டாம் இடம் என்றாகிவிடும்.

இந்த அனைத்து முறைகேடுகளையும் முறியடிக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளின் விளைவாக, நமது நாட்டின்  மனித கடத்தலில் நம் நாட்டின் நிலையை பாதுகாக்க முடிந்துள்ளது.  அதற்காக அந்தப் பணிகளைச் செய்ததற்காக செயல்திறன் மிக்க எமது  படை செயலணிக்கு  நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். கடந்த ஆண்டு “விசிட் “விசாவில் வெளி நாடு சென்று ஆதரவற்ற நிலைக்கு உள்ளானவர்களை ஜனாதிபதி அவர்களின்  சிறப்பு ஒப்புதலின் பேரில் இரண்டு அல்லது மூன்று விமானங்களில் இவர்களை அழைத்து வர ஏற்பாடு செய்தேன். இது எளிதானது விடயம் அல்ல. இவை அனைத்தும் அரசாங்கத்தின்  வரிப் பணத்தில் தான் நடக்கிறது.

பதிவு செய்து வெளிநாடு செல்லும்  தொழிலாளர்கள் வழங்கும்  பணத்தில் இவற்றை செலுத்த வேண்டும்.

எங்கள் புலனாய்வுப் பிரிவினர் நாடு முழுவதும் சென்று கைது செய்கிறார்கள். இவ்வாறானவர்களை நீதிமன்றத்தின் முன் நிறுத்துவோம். எனவே இதுதொடர்பான வழக்குகளுக்கு செல்லும் காலத்தை நீங்கள் அறிவீர்கள். திருடர்கள் வழக்கம் போல் தமது திருட்டு நடவடிக்கைகளேயே மேற்கொள்வார்கள். . சி.ஐ.டி.க்கு நாம் தினசரி முன்வைக்கும் விடயங்களின் முடிவுகள் மூலம் எதிர்காலத்தில் பயனுள்ள  பெறுபேறு கிடைக்கும்  என்று நான் நம்புகிறேன். எனக்கு இன்னும் முடிவுகள் கிடைக்கவில்லை.  எங்களிடம் பொலிஸ் அதிகாரிகள் இல்லை. எங்களிடம் எமது அதிகாரிகள் மட்டுமே இருக்கின்றனர். கைவிலங்கை  எடுத்துச் செல்லும்  அதிகாரம் இல்லாவிட்டாலும் எமது அதிகாரிகள் சென்று கைது செய்கிறார்கள். இது அதிகாரத்தைக் கையில் எடுத்து செய்யும் வேலை. மக்களைப் பாதுகாப்பதற்காகவே அதற்கு வலுவூட்டுகிறோம். அரசியலமைப்பை பாதுகாக்க நாம் அனைவரும் கடமைப்பட்டுள்ளோம். அது உண்மை. ஆனால் எல்லாவற்றிற்கும் மேலாக, மக்கள் இருக்கிறார்கள். மக்களைப் பாதுகாக்க நாங்கள் இருக்கிறோம்.

மக்களின் பொருளாதாரம் மற்றும் உணவு மற்றும் பானங்களின் பற்றாக்குறை ஆகிய விடயங்களே முதலிடத்தில் தற்போது உள்ளன. இந்த பணியில் எமக்கு  ஊடகங்களின் ஒத்துழைப்பு அதிகம் தேவை. தயவு செய்து வெளியூர் செல்லும் மக்களுக்கு, கழிவு  மீன்களின் சுவையை அனுபவிக்க இடமளிக்காது, இவ்வாறு தவறான வழியில் வெளிநாடு செல்ல முயற்சிப்போரை தெளிவுபடுத்துங்கள்

எமக்கு  உதவுங்கள். இந்த அதிகாரிகள் செய்யும்  தியாகத்திற்கு ஊக்கமளிக்க முனவாருங்கள் . ஒரு நாடாக ஒன்றிணையுங்கள் அதற்கு தேவையான ஆதரவை வழங்குகள்.பாதுகாப்பு அமைச்சு மேற்கொள்ள வேண்டியதை  அதற்கு தலைமைத்துவம் வழங்கி அதனை மேற்கொள்வதையிட்டு பணியகத்திற்கு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.

சட்டத்தின்படி, இது பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்ட பணி அல்ல. ஆட்கடத்தல் மற்றும் ஆள் கடத்தலை நிறுத்துவது பாதுகாப்பு அமைச்சகத்தை சார்ந்தது.

வெளிநாட்டு புலம்பெயர்த தொழிலாளர்களை  மனித வெடிகுண்டாக நடத்தியதன் பலன் கிடைத்துள்ளது. கையிருப்பு அந்நிய செலாவணி நூறு இருநூறு மில்லியன் டொலர்களாக வீழ்ச்சியடைந்த  ஒரு காலம் இருந்தது. நாட்டின் அந்நிய செலாவணி இருப்பை  3 பில்லியன் டொலர்களுக்கு மேல் அதிகரிக்க எம்மால்  முடிந்தது. இதற்கு காரணம்  புலம்பெயர் தொழிலாளர்களுக்கு அவர்களுக்கான கௌரவம் அளிக்கப்பட்டமையேயாகும்.  இந்த தொழிலாளர்களுக்கு  அந்த மரியாதை கொடுக்கப்பட்டதால் எந்த அரசியல் கட்சி பணம் நாட்டுக்கு (டொலர்களை) அனுப்ப வேண்டாம் என்று சொன்னாலும், இந்த ஆண்டு மூன்றரை பில்லியன் டொலர்கள் அனுப்பப்பட்டுள்ளன. இவர்கள் பணம் அனுப்புவதால்தான் இன்று எரிபொருள் , எரிவாயு, மருந்து முதலானவற்றை பயமின்றி வெளிநாட்டில் இருந்து கொண்டுவர முடிகிறது.

அவர்களுக்கென பிரிவு ஏற்படுத்திகொடுத்த போதிலும் அதில் அமர “இமிக்கிறேசன்”  வரவில்லை.

அவர்களுக்கென தனி பிரிவை உருவாக்கி பெயர் பலகை வைப்பதில் எந்த பயனும் இல்லை. அவர்களுக்கான  கௌரவத்தை  அவர்களுக்கு வழங்க வேண்டும். ஆனால் புலம்பெயர் தொழிலாளர்கள் அனுப்பும் பணத்தில் தான் இவர்களுக்கான  சம்பளம் வழங்கப்படுகிறது.

ஆனால், அவர்கள்  விமான நிலையத்திலும் விமானத்திலும் மோசமாக முறையில் நடத்தப்படுகிறார்கள்.கிராமத்திலிருந்து வந்த அப்பாவிப் பெண்களிடம் அவர்களுக்கு புரியாத ஆங்கில மொழியில் பேசும்  விமானப் பணிப்பெண்கள் விமான நிலையத்திலும் விமானத்திலும் பெரும் பாலும் இருக்கின்றனர். அவர்களுக்கு புரியும்  மொழியில் உரையாடுவதில்லை அந்த மக்கள் சாப்பிடுகிறார்களா, குடிக்கிறார்களா  என்று பார்ப்பதில்லை. முறையான உணவு விநியோகம் இல்லை . அப்படித்தான் புலம்பெயர்ந்த தொழிலாளியை விமானத்திற்குள் நடத்துகிறார்கள். இதை மிகுந்த வேதனையுடன் கூறிக்கொள்கின்றேன். ஆனால் இந்த குறைபாடுகள் நிவர்த்தி செய்யப்பட வேண்டும்.

அந்த மக்களால் தான் இந்த நாட்டை மேம்படுத்த முடிந்தது.

இந்த ஆண்டு வெளிநாட்டு தொழிலாளர்கள் மூலம் இந்தியாவின் வருமானம் 112 பில்லியன்களாகும். கடந்த ஆண்டு 100 பில்லியனகள். ஆனால் நாம் 7 முதல் 8 பில்லியனுக்கும் குறைவான வருமானத்தை இழந்தோம். ஓரளவு மேம்படுத்தப்பட்டு இந்த ஆண்டு 3.5 பில்லியன்களை ஈட்ட முடிந்தது. இதை 6/7 ஆக அதிகரிக்கலாம். இந்தியாவை விட 60 மடங்கு பெரியதாக மாற்றுவது அல்ல எங்கள் நோக்கம். ஆனால் நாம் ஆண்டுக்கு 10 முதல் 12 பில்லியன் டொலர்வரையான வருமானத்தை பெற வேண்டும். எனவே நாம் அதற்காக ஒத்துழைப்பு நல்க வேண்டும்.

உற்பத்திப் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பும் ஒரு நாடாக நாம் மேம்பட வேண்டும அதற்காக , சேவைப் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப வேண்டும். சுற்றுலா பயணிகள் வரும்போது விமான நிலையங்கள் திறமையான சேவைகளை வழங்குகின்றன. எதிர்வரும்  காலங்களில் சுற்றுலா பயணிகள் அதிகம் வருவார்கள். இதுதான் நாட்டின் வளர்ச்சிக்கான முன்னோக்கிய பயணம். இதற்காக விமான நிலையம் ஏற்கனவே தயாராகி வருகிறது. இதனை நாட்டின் வளர்ச்சிக்கான ஒரு திசை பயணமாக பார்க்க முடியும். பொருளாதார நெருக்கடியால் திணறிப்போன நாட்டு மக்கள் மீண்டும் நிம்மதியாக சுவாசிக்கின்றனர்.பாசாங்குத்தனத்தாலும், சுயநலத்தாலும் நாட்டை விட்டு வெளியேறுபவர்கள் இருக்கும் வேளையில், தொழிலுக்காக வெளிநாடு  சென்று மீண்டும் நம் நாட்டிற்கு வரும் தொழிலாளர்களை நாம் கௌரவிக்க வேண்டும்.

அவர்கள் அதிகம் படித்தவர்கள் அல்ல. அரசுப் பணத்தை அதிகம் செலவு செய்து படித்தவர்கள் அல்ல. இவர்கள் நாட்டின் பணத்தில் படித்து, பல்கலைக்கழகம் சென்று, வெளி நாடு சென்று புலமைப்பரிசில் பெற்று, இறுதியில் அனைத்தையும் விற்பவர்கள் அல்ல. இவர்கள் நாட்டின் பணத்தில் மிகக்குறைவாகவே செலவு செய்து, வறுமையில் வாடி, வெளி நாடு சென்று சம்பாதித்து, அந்த பணத்தை இந்த நாட்டுக்கு அனுப்புகின்றனர். அவர்கள் ஆதரிக்கப்பட வேண்டும் . இதற்காகத்தான்  இவற்றை  செய்கின்றோம். தமது அறியாமையினாலேயே இவ்வாறான மோசடிகாரர்களிடம்   (இந்த மாஃபியாவிடம்) சிக்கிக் கொள்ளக்கூடும். இந்த மாஃபியாவை கைது செய்ய வேண்டும். இந்த விடயங்களுக்கு எமக்கு அனைத்து தரப்பினரினதும் ஒத்துழைப்பு  தேவை. இந்த அறிமுகப் பிரிவு வெறும் விழிப்புணர்வுப் பிரிவு மட்டுமல்ல. விமான நிலையங்கள், குடிவரவு(Department of Immigration and Emigration – DIE),, சிஐடி(Criminal Investigation Department – CID), (State Intelligence Service – SIS)  பாதுகாப்பு அமைச்சு உள்ளிட்ட அனைத்து தரப்பும் இதற்கு ஒத்துழைப்பு  வழங்க வேண்டும். வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தேவையான வழிகாட்டல்களை வழங்குகிறது.

பணியக சட்டத்தின் புதிய திருத்தம் மூலம் விமானத்திற்குள் நுழைந்த பின்னரும் தேவைப்படும் பட்சத்தில் பயணிகளை தடுத்து வைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனவே, நாட்டிற்கு வெளிநாட்டு பணத்தை பரிவர்த்தனை செய்யும் இந்த அப்பாவி மக்களை பாதுகாக்க அனைவரும் எங்களுக்கு ஆதரவளிக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்’.

இலங்கையில் பாலின சமத்துவம் மற்றும் சமத்துவத்தை உறுதி செய்வதற்கான பரிந்துரைகளைக் கண்டறிந்து  பாலின அடிப்படையிலான பாகுபாடு மற்றும் பெண்களின் உரிமை மீறல்கள் குறித்து விசேட கவனம் செலுத்தி நாடாளுமன்றத்தில் அறிக்கையை சமர்ப்பிப்பதற்காக  நியமிக்கப்பட்ட நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் அறிவுறுத்தல்களின் படி இந்த பிரிவை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சுற்றுலா வீசா மூலம் வெளிநாட்டிற்கு செல்லும் இலங்கையர்கள் ஆட்கடத்தல் மோசடி செயற்பாட்டு கும்பலிடம் சிக்குவதை தடுப்பதற்காகவும் இலங்கை புலம் தொழிலாளர்களுக்கு சரியான வழிகாட்டல்களை வழங்கும் நோக்குடன் அமைக்கப்பட்டுள்ள இந்த பிரிவின் மூலம் முக்கியமாக , மலேஷியா, ஓமான், துபாய் மற்றும் அபுதாபி ஆகிய நாடுகளுக்கு சுற்றுலா விசாக்கள் மூலம் செல்லுபவர்கள் தொடர்பில் அதிக கவனம் செலுத்துவதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளது. அத்தோடு இந்த பிரிவு வாரத்தில் 7 நாட்களும் 24 மணி நேரமும் செயல்படும் பிரிவாக விமான நிலைய வளாகத்தில் செயல்படும்

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன