தவணைப் பரீட்சைகள் குறைக்கப்படும்

2024 ஆம் ஆண்டின் முதலாம் ஆண்டு தொடக்கம் தவணைப் பரீட்சைகள் குறைக்கப்பட்டு வருடத்திற்கு ஒரு பரீட்சை மாத்திரமே நடத்தப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

இதன்மூலம் ஒவ்வொரு பாடம் அல்லது தொகுதியின் முடிவிலும் மதிப்பீடு மூலம் புள்ளிகள் கணினி குறிப்புகளாக பதிவு செய்யப்படும். அவை ஆண்டின் இறுதியில் பரீட்சை மதிப்பெண்களுடன் சேர்க்கப்படும்.

ஆரம்பத்தில் இது பரீட்சை மதிப்பெண் 70 வீதமும்; தொகுதி மதிப்பெண்ணில் 30 வீதமுமாக கருதப்பட்டாலும், அதனை 50 வீத மதிப்பெண்கள் வரம்பில் கொண்டு வரப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.

ஹேவாகம மாதிரி ஆரம்ப பாடசாலையின் மாணவர் தலைவர்களுக்கான உத்தியோகபூர்வ சின்னங்கள் அணிவிக்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றிய போதே அமைச்சர் இந்த விடயங்களை குறிப்பிட்டார்.

இம்முறையை நடைமுறைப்படுத்தும் போது பாடசாலைக்கு சமூகமளித்தல், தங்கியிருத்தல், தினசரி வகுப்பில் செயற்படுவதும் கட்டாயமாக்கப்படுவதால், பாடசாலை மாணவர்கள் மேலதிக வகுப்புகளுக்குச் செல்ல வேண்டிய தேவை ஏற்படாது எனவும் அமைச்சர் குறிப்பிட்டார். இதன்மூலம் பெற்றோர்கள் தேவையற்ற போட்டியில் சிக்கிக் கொள்ளாமல் மேலதிக வகுப்புகளுக்கு ஆயிரக்கணக்கில் பணம் செலவழிக்காமல் அந்த பணத்தை குழந்தைகளின் உணவு தேவைக்கு செலவிட முடியும் என்றும் இலவச கல்வியின் அடிப்படை நோக்கங்கள் நிறைவேறும் என்றும் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த மேலும்தெரிவித்துள்ளார்.

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன