டெல்மா தேயிலை நிறுவனத்தின் ஸ்தாபகர் மெரில் ஜே.பெர்ணான்டோ இன்று (20) காலமானார்.
இறக்கும் போது அவருக்கு வயது 93. வெற்றிகரமான தொழில்முனைவோராக செயல்பட்டதுடன் பல விருதுகளையும் பாராட்டுகளையும் இவர் பெற்றுள்ளார்.
டெல்மா தேயிலை உலகெங்கிலும் 100க்கும் மேற்பட்ட நாடுகளில் பிரபலமான தேயிலை வர்த்தகச் சின்னமாக விளங்குகின்றமை குறிப்பித்தக்கது.