ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (21) இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு மற்றும் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க உள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்தியாவுக்கான இரண்டு நாள் விஜயத்தை மேற்கொண்டு நேற்று அங்கு பயணமானார்.
அங்கு இருதரப்பு பேச்சுவார்த்தைகளும் நடைபெற உள்ளது. நேற்று பிற்பகல் இந்தியாவை சென்றடைந்த ஜனாதிபதியை, அந்நாட்டு வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் வி.முரளிதரன் வரவேற்றார்.
பின்னர் நேற்று இரவு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெயசங்கருக்கிடையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் இந்தியாவுக்கான இரண்டாவது விஜயம் இதுவாகும்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில் ஜனாதிபதியின் இந்திய விஜயம் மேற்கொண்டுள்ளார். ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் திரு.ரணில் விக்கிரமசிங்க இந்தியாவிற்கு மேற்கொள்ளும் முதலாவது உத்தியோகபூர்வ விஜயம் இதுவாகும்.