ஐக்கிய மக்கள் சக்தி, எந்தவித தடைகளையும் கருத்தில் கொள்ளாது……..

ஐக்கிய மக்கள் சக்தி எந்தவித தடைகளையும் கருத்தில் கொள்ளாது, தற்போதைய அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கான முதலாவது பொது மக்கள் போராட்டத்தை நாளை மேற்கொள்ளும் என்று அதன் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.
‘பொலிஸ் மா அதிபர் அல்லது வேறு யாரேனும் எந்தவொரு கட்டுப்பாடுகளையும் விதிக்கலாம், ஆனால் நாங்கள் அனைத்து விதிகளையும் மீறி 50,000 பேரை நாளை கொழும்புக்கு அழைத்து வருவோம்’ என்றும் அவர் கூறினார்.
இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்களுடனான சந்திப்பில் இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில் 2022 கிளர்ச்சியின் முன்னோடி ஐக்கிய மக்கள் சக்தி . இம்முறையும் அவ்வாறே செயல்பட எண்ணியுள்ளோம். நாளை எங்கு செல்கிறோம் என்று சொல்ல வேண்டிய அவசியம் இல்லை ஆனால் நாளை சரியான நேரத்தில் எமது மக்கள் பலத்தை எடுத்துக்காட்டுவோம் என்றார்.

මෙවැනි පුවත් එසැනින් දැනගන්න 👇
අපගේ WhatsApp Channel එකට එකතුවෙන්න!