எம்.வி எம்பிரஸ்  சொகுசு கப்பல் திருகோணமலையை வந்தடைந்தது

இந்தியாவின் எம்.வி. எம்பிரஸ் சொகுசு கப்பல் நேற்று (08) திரிகோணமலையை  வந்தடைந்தது

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான்  தலைமையில்,பிரதம செயலாளர்,ஆளுநரின் செயலாளர், திருக்கோணமலை கிழக்கு  கடற்படை கட்டளை தளபதி,பிரதி பொலிஸ்மா அதிபர் உள்ளிட்ட பலர் இதனை  உத்தியோகபூர்வமாக வரவேற்றனர்.

சொகுசு கப்பல் கடந்த 5 ஆம் திகதி  சென்னையில் இருந்து இலங்கைக்கான பயணத்தை ஆரம்பித்தது.  பயணத்தை  இந்திய  துறைமுகங்கள் துறை அமைச்சர் சர்பானந்த சொனோவால் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த சொகுசு கப்பல் இந்தியா மற்றும் இலங்கையின்  சுற்றுலா துறை வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றும் .

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன