இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு – தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது.
2023 செப்டம்பர் 22ஆம் திகதிக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு
2023 செப்டம்பர் 22ஆம் திகதி அதிகாலை 5.00 மணிக்கு வெளியிடப்பட்டது.
நாட்டின் மேல் மற்றும் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடைவ மழை பெய்யக்கூடும்.
வடமத்திய மாகாணத்திலும் கண்டி, நுவரெலியா மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ஊவா ,மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும், வவுனியா முல்லைத்தீவு மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவில் மழை ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்