இலங்கைக்கும் தமிழகத்திற்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவை இன்று ஆரம்பம்

நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைமுகத்துக்கு பயணிகள் சொகுசு கப்பல் போக்குவரத்து சேவை இன்று (14) முதல் ஆரம்பமானது.
தமிழ் நாட்டின் நாகையில் இருந்து காலை 8.15க்கு, கொடியசைத்து இந்த கப்பல் சேவையை ஆரம்பித்து வைத்தார்.
இம்மாதம் 12 ஆம் திகதி தொடங்கவிருந்த கப்பல் போக்குவரத்துக்கு, நிர்வாக காரணங்களுக்காக ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில், இன்று தொடங்கப்பட்டுள்ளது.
சுமார் 40 ஆண்டுகளுக்குப் பிறகு இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையிலான பயணிகள் கப்பல் சேவை இன்று ஆரம்பமானது.

நாகை துறைமுகத்தில் நடைபெற்ற விழாவில்இ இந்திய பிரதமர் மோடி காணொலி வாயிலாக பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவையை தொடங்கிவைத்தார்.
நாகப்பட்டினத்தில் நடைபெற்ற தொடக்க விழாவில் இந்திய அமைச்சர் சர்பானந்த சோனாவால், தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு ஆகியோர் பங்கேற்று கொடியசைத்து கப்பல் சேவையை ஆரம்பித்துவைத்தனர்.கப்பல் சேவையை தொடக்கிவைத்துப் பேசிய பிரதமர் மோடி ஆங்கிலம், சிங்களம், தமிழ் என மூன்று மொழிகளிலும் வணக்கம் கூறினார்.
இந்தியா – இலங்கை இடையே தூதரக, பொருளாதார உறவுகளில் புதிய அத்தியாயத்தை எழுதுகிறோம். இந்தச் சூழலில் இலங்கை காங்கேகசன்துரை – இந்தியாவின் நாகப்பட்டினம் இடையேயான கப்பல் போக்குவரத்து இருநாட்டு உறவையும் வலுப்படுத்துவதில் மிக முக்கியமான மைல்கல்.

இந்தியா – இலங்கை பயணிகள் கப்பல் சேவையானது போக்குவரத்து தொடர்பை மேம்படுத்துவதோடு வர்த்தகத்தையும் வளர்க்கும். இருநாடுகளுக்கும் இடையேயான நீண்ட கால உறவை வலுப்படுத்தும்’ என்று கூறினார். இந்தியா – இலங்கை இடையேயான கடல்வழிப் போக்குவரத்துக்கு சங்க இலக்கியங்கள் பட்டினப்பாலை, மணிமேகலையில் சான்று இருப்பதாக பிரதமர் மோடி மேற்கோள் காட்டி பேசினார்.

தொடக்க விழாவை முன்னிட்டுஇ இன்று ஒரு நாள் மட்டும் கட்டணச் சலுகையாக, இந்தியாவில் இருந்து இலங்கை செல்லும் பயணிகளுக்கு (சிங்கிள் ட்ரிப்) டிக்கெட் விலை இந்திய நாணயத்தில் ரூ.3 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதேநேரத்தில், இலங்கையில் இருந்து நாகைக்கு செல்ல வழக்கம்போல இந்திய நாணயத்தில் ரூ.7,670 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இக்கட்டணம் ஜிஎஸ்டி வரி உட்பட ரூ.7.670 ஆகும் என தமிழக ஊடகம் தெரிவித்துள்ளது.

150 பயணிகள் வரை பயணம் மேற்கொள்ளும் வசதியுள்ள இந்த கப்பலில் இன்று 50 பயணிகள் இலங்கைக்குப் புறப்பட்டனர் என தமிழக ஊடகம் தெரிவித்துள்ளது.

நாகையில் இருந்து 60 நாட்டிக்கல் மைல் தொலைவில் உள்ள இலங்கை காங்கேசன்துறையை இந்த கப்பல் 3.30 மணி நேரத்தில் வந்தடையும்.

இந்த கப்பல் நாகையில் இருந்து இலங்கைக்கும், இலங்கையில் இருந்து நாகைக்கும் தினமும் தலா ஒருமுறை இயக்கப்படும். இந்தக் கப்பல் பயணத்தின்போது பயணிகள் அதிகபட்சம் 52 கிலோ எடை கொண்ட உடைமைகளை எடுத்துச் செல்ல முடியும்.

இந்தப் பயணிகள் கப்பல் அன்றாடம் காலை 7 மணிக்கு நாகையில் இருந்து புறப்படும். நண்பகல் 12 மணிக்கு இலங்கை காங்கேசன்துறை துறைமுகத்தை வந்தடையும். பகல் 1.30 மணிக்கு புறப்பட்டு மாலை 5.30 மணிக்கு நாகையை சென்றடையும்

தமிழகத்தின் நாகை துறைமுகத்திற்கு அக்டோபர் 7 ஆம் திகதி இந்த சொகுசு கப்பல் வந்தடைந்தது. இந்நிலையில், அக்.9 ஆம் திகதி வெள்ளோட்டம் இடம்பெற்றது..
இந்த சொகுசு கப்பல் போக்குவரத்துக்கு சேவை மூலம் தமிழ் நாட்டிற்கும் காங்கேசன் துறைக்கும் இடையில் 4 மணித்தியாலங்களில் பயணிக்க முடியும்.
150 பேர் பயணிக்ககூடிய இந்த கப்பலில் முதல் நாள் பயணத்துக்காக 50 பேர் முன்பதிவு செய்துள்ளனர்.

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன