இலங்கையில் இந்த வருடத்தின் முதல் 10 மாதங்களில் 399 யானைகள் உயிரிழந்துள்ளதாக வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது. பெரும்பாலான யானைகள் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்துள்ளதாக இதுதொடர்பாக வனவிலங்கு பாதுகாப்பு திணைக்கள அதிகாரி ஹாசினி சரத்சந்திர தெரிவிக்கையில் இயற்கையான காரணங்களாலேயே கணிசமான எண்ணிக்கையிலான காட்டு யானைகள் உயிரிழந்திருப்பதாக கூறினார்.
2022 ஆம் ஆண்டு இந்த நாட்டின் வரலாற்றில் அதிக யானைகள் இறந்தன.அந்த எண்ணிக்கை 439. தற்போதைய நிகையை கருத்தில் கொண்டால் இ 2023-ம் ஆண்டு யானைகள் அதிகளவில் உயிரிழக்கும் ஆண்டாக மாற வாய்ப்புள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
2011 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட காட்டு யானைகள் கணக்கெடுப் பின் போது நாட்டில் 5,878 காட்டு யானைகள் இருப்பதாக மதிபபிடப்பட்டதாகும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.