ஆசிய விளையாட்டுப் போட்டியில் இலங்கைக்கான முதல் தங்கப் பதக்கம்

சீனாவில் நடைபெறும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் இலங்கைக்கான முதல் தங்கப் பதக்கத்தைஇ தருஷி கருணாரத்ன பெற்றுள்ளார்.
பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போம்டியிலேயே இவர்தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
இவர் குறித்த தூரத்தை ஓடி முடிக்க 2.03.20 நிமிடங்களை எடுத்துக்கொண்டார்.
21 வருடங்களின் பின்னர் ஆசிய விளையாட்டுப் போட்டியில் இலங்கைக்கு கிடைத்த முதல் தங்கப் பதக்கம் இதுவாகும்.
இந்த போட்டியில் இந்தியா வெள்ளிப் பதக்கத்தையும், சீனா வெண்கலப் பதக்கத்தையும் வென்றன.
இதே வேளை நேற்று நடந்த பெண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் நதிஷா வெள்ளிப் பதக்கத்தை வென்றிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன