அம்பாறை நகர் பிரதேசங்களில் டெங்கு நோய் பரவும் அபாயம்

அம்பாறை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவிலுள்ள நகர் பிரதேசங்களில் டெங்கு நோய் பரவும் அபாயம் நிலவுகிறது.

அம்பாறை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய டாக்டர் ஐ.எல்.எம். றிபாஸ் இது தொடர்பாக தெரிவிக்கையில், இந்த நிலையையடுத்து பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவுக்குட்பட்ட பிரதேசங்களில் டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

பருவ மழை பெய்ததையடுத்து அண்மைக்காலமாக டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டு வருவதோடு இது தொடர்பாக பொது மக்கள் மிக அவதானமாக செயற்படுமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் விழிப்புடன் செயல்பட்டு வீடுகளில் தேங்கியுள்ள குப்பைகள், நீர் தங்கியுள்ள இடங்கள் போன்றவற்றை அகற்றி டெங்கு நுளம்புகள் பெருகுவதற்கு இடம் கொடுக்காத வகையில் துப்புரவாக தமது இடங்களை வைத்து கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டு வருவதாகவும் டாக்டர் ஐ.எல்.எம். றிபாஸ் தெரிவித்துள்ளார்.

මෙවැනි පුවත් එසැනින් දැනගන්න 👇
අපගේ WhatsApp Channel එකට එකතුවෙන්න!