பிரபாகரனின் மரணம் தொடர்பாக தனக்கு எதுவும் தெரியாது என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவிப்பு

தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மரணம் தொடர்பாகவோ அல்லது அவரது மரணம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் மரபணுப் பரிசோதனை பற்றியோ தனக்கு எதுவும் தெரியாது என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இறுதி யுத்தத்தின் போது நான் இரண்டு வாரங்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சராக கடமையாற்றினேன். ஆனால் எனக்கு அது பற்றி எதுவும் தெரியாது. அதைப் பற்றி யாரும் என்னிடம் எதுவும் சொல்லவில்லை. தெரிவிக்கவில்லை. பின்னர், நான் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் இது தொடர்பான தகவல்களைப் பெற முயற்சித்தேன். ஆனால் இராணுவம் அதைத் தடுத்தது ‘என்றும் அவர் யாழில் நல்லுரில் செய்தியாளர்களுக்கு பதிலளித்தார்.

இறுதி யுத்தத்தின் போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வெளிநாட்டில் இருந்தார், அப்போது அமைச்சர் மைத்திரிபால சிறிசேன பாதுகாப்பு அமைச்சராக கடமையாற்றினார்.

මෙවැනි පුවත් එසැනින් දැනගන්න 👇
අපගේ WhatsApp Channel එකට එකතුවෙන්න!

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன