61 டெங்கு அபாய வலயங்கள் – 31 பேர் உயிரிழப்பு

61 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள் அதிக டெங்கு அபாய வலயங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் டெங்கு நோய் கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் 31 டெங்கு நோயாளர்கள் உயிரிழந்துள்ளதாகவும் டெங்கு நோய் கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. அத்தோடு கடந்த இரண்டு நாட்களில் மாத்திரம் நாடளாவிய ரீதியில் 439 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். இந்த வருடத்தில் மொத்தமாக 49 ஆயிரத்து 759 டெங்கு நோயாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர். மேல் மாகாணத்தில் மாத்திரம் 24 ஆயிரத்து 837 பேர் பதிவாகியுள்ளதாக டெங்கு நோய் கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன