இந்தியாவின் ‘ஐஎன்எஸ்வாகிர்’ நீர்மூழ்கிக்கப்பல் – பாதுகாப்பு அமைச்சர் பார்வையிட்டார்

நல்லெண்ண விஜயம் ஒன்றை மேற்கொண்டு இலங்கை வந்த இந்திய கடற்படைக்குச் சொந்தமான ‘ஐஎன்எஸ் வாகிர்’ என்ற கப்பலை பதில் பாதுகாப்பு அமைச்சர் கௌரவ பிரமித்த பண்டார தென்னகோன் பார்வையிட்டார்.

கொழும்பு துறைமுகத்தில் தரித்து நின்ற மேற்படி நீர்மூழ்கிக் கப்பலை பார்வையிட (ஜூன் 21) சென்ற பதில் பாதுகாப்பு அமைச்சரை நீர்மூழ்கி கப்பலின் கட்டளைத் தளபதி கொமாண்டர் திவாகர் எஸ் வரவேற்றார்.

இந்த விஜயத்தின் போது பதில் பாதுகாப்பு அமைச்சர் மேற்படி நீர்மூழ்கி கப்பலில் சேவையாற்றும் அதிகாரிகளுடன் சிநேகபூர்வமாக கலந்துரையாடினார்.

இதேவேளை கப்பலின் தொழில்நுட்ப மற்றும் கடல்சார் திறன்கள் குறித்து அமைச்சருக்கு விளக்கமளிக்கப்பட்டது. மேற்கு பிராந்திய  கடற்படை கட்டளை தளபதி ரியர் அட்மிரல் சுரேஷ் டி சில்வா மற்றும் கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கெப்டன் விகாஸ் சூட் ஆகியோரும் இந்த விஜயத்தின்போது அமைச்சருடன் கலந்து கொண்டனர்.

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன