ஆடிவேல் விழா: யாத்திரீகர்களுக்கான காட்டுப்பாதை 12 ஆம் திகதி திறப்பு

வரலாற்று சிறப்புமிக்க கதிர்காம புனித ஆடிவேல் விழாவிற்கு செல்லும் யாத்திரீகர்களுக்கான காட்டுப்பாதை எதிர்வரும் 12ஆம் திகதி திங்கட்கிழமை காலை 07.00 மணிக்கு திறக்கப்படவுள்ளதாக அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வீ. ஜெகதீசன் தெரிவித்தார். இப்பாதை 25ம் திகதி ஞாயிற்றுக்கிழமை மூடப்படவுள்ளது.


கதிர்காமத்திற்கு பாதயாத்திரையாக செல்வோர் உகந்தமலை முருகன் ஆலயத்தில் ஓரிருநாட்கள் தங்கியிருந்து குமண யால காட்டினூடாக பிரவேசித்து கதிர்காமத்தை சென்றடைவது வழக்கம்.


12ம் திகதி திங்கட்கிழமை காலை 07.00 மணிக்கு உகந்தமலை முருகன் ஆலையத்தில் நடைபெறவிருக்கும் விசேட பூஜையையடுத்து காட்டுப்பாதை காலை ஆறு மணி முதல் பிற்பகல் மூன்று மணி வரை மாத்திரமே திறந்து இருக்குமெனவும் அக் காலப்பகுதிக்குள் மட்டுமே காட்டிற்குள் செல்ல யாத்திரீகர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன