இலங்கையில் ஐந்து வயதுக்குட்பட்ட பிள்ளைகளில் மூன்றில் ஒரு பகுதியினர் போசாக்கின்மையால் பாதிப்பு

இலங்கையில் சிறுவர்களின் உயரத்திற்கு அமைவாக உடலின் எடை முதலானவையில் சரியாக வளர்ச்சி இடம்பெறவில்லை என மத்திய வங்கி வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் நிலவிவரும் ஊட்டச் சத்து குறைபாடு பிரச்சினை நீடித்து வருவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பெருந்தோட்ட தொழில் துறையில் ஐந்து வயதுக்குட்பட்ட சிறுவர்களில் 29 வீதமானோர் குறைவான எடை கொண்டவர்கள் என்றும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன