இலங்கை மத்திய வங்கி அதன் நாணயக்கொள்கை நிலைப்பாட்டினைத் தளர்த்துகின்றது

இலங்கை மத்திய வங்கியின் நாணயச்சபையானது 2023 மே 31ஆம் நாளன்று நடைபெற்ற அதன் கூட்டத்தில் மத்திய வங்கியின் துணைநில் வைப்பு வசதி வீதத்தினையும் துணைநில் கடன்வழங்கல் வசதி வீதத்தினையும் முறையே 13.00 சதவீதத்திற்கும் 14.00 சதவீதத்திற்கும் 250 அடிப்படைப் புள்ளிகளினால் குறைப்பதற்குத் தீர்மானித்துள்ளது.

எதிர்பார்த்ததிலும் பார்க்க விரைவாக மெதுவடைகின்ற பணவீக்கம், பணவீக்க அழுத்தங்கள் படிப்படியாக இல்லாதொழிகின்றமை மறைவு மற்றும் பணவீக்க எதிர்பார்க்கைகள் மேலும் நிலைநிறுத்தப்படுகின்றமை என்பவற்றுடன் இசைந்துசெல்லும் விதத்தில் நாணய நிலைமைகளை தளர்வடையச்செய்கின்ற நோக்குடன் சபை இத்தீர்மானத்தினை மேற்கொண்டது. இத்தகைய நாணயத் தளர்வடையச்செய்தலின் ஆரம்பமானது 2022இல் பதிவுசெய்யப்பட்ட நடவடிக்கைகளின் வரலாற்றுச் சுருக்கத்திலிருந்து பொருளாதாரம் மீளெழுச்சியடைவதற்கான உத்வேகமொன்றினை வழங்குகின்ற வேளையில் நிதியியல் சந்தைகளிலுள்ள அழுத்தங்களையும் தளர்வடையச்செய்யுமென எதிர்பார்க்கப்படுகின்றது.
முழுவடிவம்

https://www.cbsl.gov.lk/sites/default/files/cbslweb_documents/press/pr/press_20230601_Monetary_Policy_Review_No_4_2023_t.pdf

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன