தொழில் சட்ட திருத்தங்கள் தொடர்பில் ஜனாதிபதியின் தொழிற் சங்க தொடர்பு பிரிவுக்கு உட்பட்ட அனைத்து தொழிற் சங்கங்கள் மற்றும் சம்ப ந்தப்பட்ட அதிகாரிகளை அழைத்து அவர்களுடன் விசேட பேச்சுவார்தை நடத்தப்படவுள்ளதாக ஜனாதிபதி தொழிற் சங்க பணிப்பாளர் நாயகம் சமன் ரட்னபிரிய தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில் ‘ நாட்டின் தொழில் சட்டம் பழமையானது. தொழில் சட்டத்தில் சிறியளவில் மாற்றங்கள் செய்யப்பட்டாலும், நாட்டை உலக நாடுகளின் வளர்ச்சிக்கு ஏற்ப முன்னெடுக்க வேண்டும் என்ற இலக்கிற்கு அமைவாக, தொழில் சட்டத்தில் ஒட்டுமொத்தமாக திருத்தங்கiளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இப்போது நம் நாட்டில் அரச துறைக்கு ஒரு சட்டமும், தனியார் துறைக்கு ஒரு சட்டமும் இருக்கிறது. இவைகள் மாற்றப்பட வேண்டும். இவை பொதுவாக நாட்டின் சம்மந்தப்பட்ட தரப்பினரின் உடன்படிக்கையுடன் மேற்கொள்ளப்படுகின்றன. பேச்சுவார்த்தைக்குள் இந்த சட்டங்கள் திருத்தப்பட வேண்டும் என்று தெரிவித்தார்.