தண்டனை முடிந்து குற்றவாளிகளை விடுதலை செய்வதற்குப் பதிலாக அவர்களுக்கு புனர்வாழ்வு மற்றும் தொழில் பயிற்சிகளை வழங்குவதற்கான வேலைத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாக நீதி மற்றும் சிறைச்சாலை அலுவலல்கள் இராஜாங்க அமைச்சர் அனுராத ஜயரத்ன கூறுகிறார்
சிறைச்சாலைகள் திணைக்களம் சுகாதார அமைச்சுடன் இணைந்து காவலர்களுக்கு பயிற்சியளிக்கும் செயற்திட்டமொன்றுக்கு திட்டமிட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய அமைச்சர், எதிர்வரும் பதினைந்து நாட்களுக்குள் இது தொடர்பான அறிக்கை வெளியிடப்படும் எனவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.
சிறைச்சாலைகளில் இருக்கக்கூடிய கைதிகளின் எண்ணிக்கை ஏற்கனவே அதிகரிக்கப்பட்டுள்ளதை இராஜாங்க அமைச்சர் அனுராத ஜயரத்ன உறுதி செய்தார்
நாட்டிலுள்ள சிறைச்சாலைகளில் உள்வாங்கக் கூடிய மொத்த கைதிகளின் எண்ணிக்கை 13,000 ஆகும் . ஆனால் இந்த எண்ணிக்கை ஏற்கனவே 33,000 யைத் தாண்டியுள்ளது. போதைப்பொருள் ஒழிப்புக்கான யுத்திய என்ற நடவடிக்கை மூலம் நாளாந்தம் கைது செய்யப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமை சுகாதார மற்றும் நெருக்கடி நிலைக்கு ஒரு முக்கிய காரணம் என்றும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.
இதேவேளை ,சிவில் தண்டனை பெற்ற குற்றவாளிகளை வீட்டுக் காவலில் வைப்பது தொடர்பான சட்டமூலம் இந்த ஆண்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும். சிறைச்சாலைகளில் நிலவும் நெரிசலுக்கு மாற்றாக இந்த சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் அனுராத ஜயரத்ன தெரிவித்துள்ளார்.