‘தமிழ் ஈழம்’ உருவாக்கப்பட்டிருந்தால் பாலஸ்தீனத்துக்கு ஏற்பட்ட கதிதான் நமக்கும் – விமல் வீரவன்ச

இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான யுத்தத்தில் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நடுநிலை வகித்தமை ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று என்று நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
சீனாவிற்கான விஜயத்தின் பின்னர் ஊடகவியலாளர்களுடனான சந்திப்பில் திரு விமால் வீரவன்ச கலந்துகொண்டார். இதன்போது தற்போது நடைபெறும் இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான யுத்தம் குறித்தவிடயத்தில் இலங்கையின் நிலைப்பாடு குறித்து ஜனாதிபதி ‘இஸ்ரேலுக்கோ பாலஸ்தீனத்திற்கோ பக்க சார்பான நிலைப்பாட்டை இலங்கை மேற்கொள்ளவில்லை என்று குறிப்பிட்டிருந்ததை ஏற்றுக்கொள்ள முடியாது என்றார்.
‘போரின் போது, நெகிழ்வு போக்கை கடைபிடிக்க முடியாது என்று தெரிவித்த அவர் பலஸ்தீனமே நாடு. ஆனால் இஸ்ரேல் என்பது பிரிட்டிஷ் ஏகாதிபத்தியவாதிகளால் செயற்கையாக உருவாக்கப்பட்ட அரசு என்று குறிப்பிட்டார்
இலங்கையில் ‘தமிழ் ஈழம்’ உருவாக்கப்பட்டிருந்தால் பாலஸ்தீனத்துக்கு ஏற்பட்ட கதிதான் நமக்கும் ஏற்படும். இருப்பினும், பாலஸ்தீனத்திற்கு வரலாற்று ரீதியாக அநீதி இழைக்கப்பட்டுள்ளது.
அந்த வரலாற்று அநீதியை உலகம் சரி செய்திருக்க வேண்டும். அது இன்று வலுவடைந்துள்ளது. உலக வரைபடத்தில் இருந்து பாலஸ்தீனத்தை முற்றிலுமாக துடைத்துவிட்டு ‘யூத இஸ்ரேலுக்கு’ அதிகாரம் அளிக்கும் அதிகார நடவடிக்கை செயல்படுத்தப்பட்டு வருவதாக அவர் குற்றஞ் சாட்டினார்.
இம்முறை போரை ஆரம்பித்தது ஹமாஸ் அமைப்பு தான், ஆனால் இந்த ஹமாஸ் இஸ்ரேல் உளவுத்துறையான ‘மொசாட்’ மூலம் உருவாக்கப்பட்டது, யாசர் அராஃபத்தின் பலஷ்தீன விடுதலை இராணுவத்திற்கு எதிராக மொசாட் ஹமாஸை உருவாக்கியது என்றும் அவர் கூறினார்.
இஸ்ரேலின் உத்தியோகபூர்வ உளவுத்துறையான மொசாட் உருவாக்கிய ஹமாஸ் இன்று இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது ஒரு விதிவிலக்கான நிகழ்வு என்று அவர் கூறினார்.

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன