இஸ்ரேல் – ஹமாஸ் தாக்குதல் ,காணாமல் போயிருந்த இலங்கைப் பெண் மரணம்

இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலின் போது காணாமல் போயிருந்த இலங்கைப் பெண் திருமதி அனுலா ரத்நாயக்க (ஜெயதிலக) உயிரிழந்திருப்பதாக இஸ்ரேல் பொலிஸ் திணைக்களம் இன்று உறுதி செய்துள்ளது.

களனி எரிவெட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த (Mrs. Anula ratnayake ((Jayathilaka) resident of Eriyawetiya area, Kelaniya Eriwetiya), திருமதி அனுலா ரத்நாயக்க என்ற பெண் மரணமாகயிருப்பதாக இஸ்ரேல் பொலிஸ் திணைக்கள உறுதி செய்துள்ளது.

சம்பந்தப்பட்ட பெண்ணின் சடலம் இரண்டு நாட்களுக்குள் இலங்கை தூதரகத்திடம் ஒப்படைக்கப்பட உள்ளது. சடலம் அடையாளம் காணப்பட்ட பின்னர், உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்துவது மற்றும் மத வழிபாடுகள் செய்வது குறித்த தகவல்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்று அங்குள்ள இலங்கை தூதரகம் அறிவித்துள்ளது.

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன